வாழ்க்கையை விசாரிக்கும் சினிமா
வாழ்க்கையை விசாரிக்கும் சினிமா, ஆழங்களினூடு…,எம்.ரிஷான் ஷெரிப், வம்சி புக்ஸ், விலை: ரூ.350
கவிதை, சிறுகதை, மொழிபெயர்ப்புகள் வழியாக இலக்கியப் பங்களிப்பு செய்துகொண்டிருந்த ரிஷான் ஷெரிபுக்குள் ஒளிந்திருக்கும் சினிமா ரசிகன் எழுதிய புத்தகம் இது. சர்வதேச அளவில் கவனம் பெற்ற மிக முக்கியமான சிங்களம், தமிழ், மலையாள சினிமாக்களோடு, பிற தேசப் படங்கள் குறித்தும் எழுதியிருக்கிறார்.
அதோடு, திரைக் கலைஞர்களுடன் அவர் நிகழ்த்திய நேர்காணல்களும் இடம்பெற்றிருக்கின்றன. சினிமா எனும் கலையைப் பேசுவதன் வழியாக வெவ்வேறு விதமான வாழ்க்கையை விசாரணை செய்வதாக அமைந்திருக்கும் தொகுப்பு இது.
– கதிரவன்
நன்றி: தமிழ் இந்து, 25/8/19
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818