வீடுகளிலும் பள்ளிகளிலும் 5

வீடுகளிலும் பள்ளிகளிலும் 5, எஸ் – வேதா, டி.ஸ்ரீதரன், வேத ப்ரகாசனம்,  பக்.352, விலை ரூ.500.

ஜப்பானில் பெரிய தொழிற்சாலைகளில், நிறுவனங்களில் உள்ள பொருட்களையும், செயல்முறைகளையும் எளிமையாகவும், முறைப்படியும், சிறப்பாகவும் கையாள, அவற்றை முறைப்படுத்துவதற்காக ஏற்பட்டதுதான் இந்த 5 எஸ். இதற்குப் பின் தொடர் முன்னேற்றமாக கெய்சன் என்ற முறையும் ஜப்பானில் கடைப்பிடிக்கப்படுகிறது.

ஒரு தொழிற்சாலையில் குவிந்து கிடக்கும் பல பொருள்களில் தேவையானவற்றையும், தேவையற்றவற்றையும் முதலில் பிரிக்க வேண்டும் (செய்ரி), அவ்வாறு பிரித்தவற்றில் எந்தப் பொருள், எந்த இடத்தில், எவ்வளவு, எப்படி வைக்கப்பட வேண்டும் என்று திட்டமிட்டு அவற்றை வைக்க வேண்டும் (செய்டன்), அவ்வாறு வைக்கப்பட்ட பொருட்களைச் சுத்தப்படுத்தி பளிச்சிடுமாறு செய்ய வேண்டும் (செய்சோ), இந்த மூன்றையும் முறையாகவும், தொடர்ச்சியாகவும் பராமரிப்பதற்கான விதிமுறைகளை உருவாக்க வேண்டும் (செய்கேட்சு), பிறகு அவற்றைத் தொடர்ந்து முறையாக கடைப்பிடிக்க வேண்டும் (ஷிட்ஷுகே). இந்த 5 எஸ் முறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் செய்யும் எந்த வேலையும் எளிதானதாகவும், மனதில் அமைதியை ஏற்படுத்துவதாகவும் மாறிவிடும். உற்பத்தித் திறனும் அதிகரித்துவிடும்.

இந்த 5 எஸ், தொழிற்சாலைகள், வீடுகள், தனிநபர்கள் என எல்லாருக்கும் பொருந்தக் கூடியது. உதாரணமாக, செல்பேசியைப் பயன்படுத்துவது, சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவது, பயணம் செய்வது, காப்பீடு பெறுவது, கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவது,உடல் நலத்தைப் பேணுவது என எல்லாவற்றையும் இந்த 5 எஸ் அடிப்படையில் சரியாகவும், சிறப்பாகவும் செய்ய முடியும். வழிகாட்டுகிறது இந்நூல்.

நன்றி: தினமணி, 17/4/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *