மாஸ்தி சிறுகதைகள்
மாஸ்தி சிறுகதைகள், மாஸ்தி வெங்கடேச அய்யங்கார், தமிழில்: சேஷநாராயணா, சாகித்திய அகாதெமி, பக்.144, விலை ரூ. 120.
சாகித்திய அகாதெமி விருதுபெற்ற, தற்கால கன்னடச் சிறுகதையின் தந்தை என அழைக்கப்படும் மாஸ்தி வெங்கடேச அய்யங்காரின் கன்னடச் சிறுகதைகளின் எளிமையான, சிறப்பான மொழி பெயர்ப்பு இந்நூல். இதில் இடம்பெற்றுள்ள 15 சிறுகதைகளும் சுவாரஸ்யமானவையே.
‘எறும்புகளின் உலகம்39‘ சிறுகதை எறும்புகளின் வாழ்க்கை குறித்த வியக்கத்தக்க செய்திகளைக் கொண்டுள்ளது. ‘மண வாழ்க்கையில் புதுமை39‘ சிறுகதையில் பெண் சுதந்திரத்தின் கசப்பான மறுபக்கம் குறித்துக் கூறப்பட்டுள்ளது. ‘இதற்கு முன் சில காலம் ஆண் அறிவில்லாமல் நடந்து கொண்டாலும் பெண் தாழ்ந்து போக வேண்டும் என்ற மனப்பான்மை இருந்தது. இது ஒரு வரம்புக்கு மீறியதால், பெண் அடிமையாக இருக்க வேண்டியதில்லை என்று பேச்சு வந்தது. அதன்பிறகு, பெண் என்ன செய்தாலும் அறிவுள்ள ஆண் அதை சகித்துக் கொண்டு வாழ்க்கை நடத்த வேண்டும் என்கிற நிலை உண்டாகி இருக்கிறது 39‘ – இவ்வாறு இச்சிறுகதையில் ஒரு கதாபாத்திரம் பெண் சுதந்திரம் பற்றி பேசுகிறது.
அடுத்து ஒரு சிறுகதை "குசேலன் பாக்கியம்'. இதைப் படிப்பதே பாக்கியம் எனலாம்; மிக அருமை.
பொதுவாக அனைத்து சிறுகதைகளும் வெளிநாட்டு நிகழ்வுகளாக இருப்பதால் அந்தந்த நாடுகளின் கலாசாரம், பழக்க வழக்கங்களையும் அறிந்துகொள்ள முடிகிறது.
நன்றி: தினமணி, 17/4/2017.