வேத வாழ்வில் பெண் குரல்
வேத வாழ்வில் பெண் குரல், ஜி.ஏ.பிரபா, சந்தியா பதிப்பகம்,பக்.120, விலை ரூ.115.
வேதகாலப் பெண்களான மைத்ரேயி, லோபமுத்ரா, காத்யாயினி, ஸ்ரீமதி, ஜபாலா, மானஸ புத்ரா, கார்கி, ஷ்ரத்தாவதி முதலிய 20 பேர் பற்றிய கதைகள் இந்நூலில் உள்ளன.
வேத காலத்தில் மக்கள் நியாயம், சத்தியம், உண்மை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்தனர்; பொறாமை, கோபம், அடுத்துக் கெடுக்கும் எண்ணமில்லாமல் வாழ்ந்தனர்; ஆணுக்கு சரிநிகராகப் பெண்கள் அனைத்துரிமைகளையும் பெற்றிருந்தனர்; அறிஞர்கள் சபையில் எதிர்த்து வாதாடவும், புரோகிதமும் செய்யவும் அனுமதிக்கப்பட்டிருந்தனர் என்பன போன்ற தகவல்களோடு அன்றைய பெண்களின் புத்திசாலித்தனம் மிக்க வீரதீரச் செயல்களை எடுத்துரைக்கிறது.
சாந்தோக்கிய உபநிஷத்தில் இடம்பெற்ற, சத்தியம் மட்டும் நிரந்தரம் எனக் கூறும் சத்தியகாமனின் தாய் ஜபாலா; கடோபநிஷத்தில் இடம்பெறும், மகனை எமனிடம் அனுப்பி மீண்டும் திரும்பப் பெற்ற நசிகேதனின் தாய் ஸ்ரீமதி, மகன் வானில் நட்சத்திரமாக ஒளிர வழிகாட்டி, தானும் அவன் அருகிலேயே ஒளிரும் பாக்கியம் பெற்ற துருவனின் தாய் சுனீதை, யாக்ஞவல்கியரின் மனைவி மைத்ரேயி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
வேதகாலப் பெண்கள் அனைவரும் துணிச்சல், தாய்ப்பாசம், சகிப்புத்தன்மை, புத்திசாலித்தனம், விவேகம், பக்குவம், ஞானம் முதலியவற்றில் மேலோங்கி இருந்தனர் என்பதை இந்நூல் எடுத்துக்காட்டுகிறது.
நன்றி: தினமணி, 1/10/2018.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818