விதுர நீதியில் நிர்வாகம்

விதுர நீதியில் நிர்வாகம்,  நல்லி குப்புசாமி செட்டியார், ப்ரெய்ன் பேங்க் பதிப்பகம், பக்.400, விலை ரூ.325.

ஸனாதன தர்மம் அல்லது அறத்தின் அடிப்படையில் அமைந்த வாழ்வே உயரியது என்பதை பல்வேறு சூத்திரங்கள் மூலம் எடுத்துரைத்தனர் நம் முன்னோர். இராமாயணமும், மகாபாரதமும் நமக்கு அறவழியை எடுத்துரைக்கின்றன. ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வில் சிறப்படைய இவற்றைப் பின்பற்றி நடக்க வேண்டும்.

இந்த நூல்களில் கூறப்பட்டிருக்கும் அறிவுரைகளும் கருத்துகளும் காலத்தால் பழைமையான போதிலும் என்றைக்கும் பொருந்தும் என்பதே இதன் சிறப்பு.
பழமொழிகளில் நிர்வாகம், நீதி நூல்களில் நிர்வாகம், ஆத்திசூடியில் நிர்வாகம், சுக்ர நீதியில் நிர்வாகம், ஹிதோபதேசத்தில் நிர்வாகம் போன்ற படைப்புகளை வாசகர்களுக்கு ஏற்கெனவே தந்த நூலாசிரியர் நல்லி குப்புசாமி, மகாபாரதத்தின் ஒரு பகுதியான விதுர நீதியை இன்றைய நிர்வாகத்துக்கு வழிகாட்டுதலாக இந்தப் புத்தகத்தில் எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

பழைய இலக்கியப் படைப்புகளில் உள்ள நிர்வாகவியல் அம்சங்களை விளக்குவதே இவரது தனித்துவம்.

அன்று திருதராஷ்டிரனுக்கு விதுரர் கூறிய அறிவுரைகளில் எவை எவை இன்றைய நிர்வாகவியல் களத்திற்குப் பொருந்தும் என்பதை 375 மேற்கோள்களைத் தேர்ந்தெடுத்துத் தெளிவாக விளக்கியுள்ளார். விதுர நீதியின் ஸ்லோகங்கள் முன்பு அப்படியே மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன.

ஒரு நிறுவனத்தின் தலைவர் எவ்வாறு இருக்க வேண்டும், பழக வேண்டும், நிறுவனத்தைக் கட்டிக்காக்க வேண்டும் என்பதை ஓர் அரசனின் கடமையோடு ஒப்பிட்டுக் காட்டுகிறார். நவீன நிர்வாகவியலுக்கு ஏற்ப இந்தப் புத்தகத்தை விளக்கி எழுதியிருக்கும் அவரது முயற்சி புதுமையானது.

நன்றி: தினமணி, 7/1/19

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *