விஷ்ணு சஹஸ்ரநாமம்
விஷ்ணு சஹஸ்ரநாமம், சுவாமி தயானந்த சரசுவதி, தமிழில் பேராசிரியர் க.மணி, அபயம் பப்ளிஷர்ஸ், விலை 1000ரூ.
மகாபாரதம் அனுசாசன பர்வத்தில் இடம் பெற்று இருப்பது விஷ்ணு சஹஸ்ரநாமம், பாண்டவர்களில் மூத்தவரான யுதிஷ்டிரர், அம்புப் படுக்கையில் இருந்த பீஷ்மரிடம் கேட்ட கேள்விகளுக்குப் பதிலாகக் கிடைத்த விஷ்ணு சஹஸ்ரநாமம், இந்துக்களின் வழிபாட்டில் முக்கியத்துவம் பெற்றதாகும்.
விஷ்ணுவைக் குறிக்கும் இந்த ஆயிரம் நாமங்களும், அவற்றுக்கு சுவாமி தயானந்த சரசுவதி அளித்த விரிவான விளக்கங்களும் இந்த நூலில் சிறப்பாகத் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. விஷ்ணுவின் வழிபாட்டில் ஒவ்வொரு நாமத்துக்கும் என்ன பொருள் என்பதோடு, அது தொடர்பான ஆன்மிக தகவல்களையும் தந்து இருப்பதால், விஷ்ணுவின் ஆயிரம் நாமாவளிகளையும் சுலபமாகப் புரிந்து கொள்ள முடிகிறது.
நன்றி: தினத்தந்தி, 13/3/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818