விதைக்குள் ஒரு விருட்சம்
விதைக்குள் ஒரு விருட்சம், புலவர் அ. செல்வராசு, டாக்டர் வ.செ. நடராசன் ஆதிபராசக்தி கிளினிக், பக். 112, விலை 120ரூ.
இந்தியாவில் மூப்பியல் மருத்துவ துறை, முதன் முதலில் சென்னை அரசு மருத்துவமனையில்தான், 1978ல் துவக்கப்பட்டது. இந்தியவிலேயே முதன்முறையாக, டாக்டர் வ.செ. நடராஜன் தான் முதன் முதலில் மூபபியல் மருத்துவ துறையில் மேற்படிப்பு முடித்தவர்.
லண்டனில் சௌத் தாம்டன் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார் நடராஜன். முதலில் வெளி நோயாளிகள் பிரிவாக துவங்கப்பட்டு, 1988ல் படுக்கை வசதிகள் கொண்ட உள்நோயாளிகள் பிரிவு, 2014ல் மண்டல முதியோர் நல மையம், தேசிய முதியோர் நல மையம் என மருத்துவப் பணிகள் விரிவடைந்ததும், டாக்டர் நடராஜனின் வாழ்க்கைப் பயணமும் ஒன்றாக பின்னிப் பிணைந்தவை.
உலக அளவில் இத்துறை சார்பாக பல ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்துள்ள டாக்டர் நடராஜன், தமிழிலும் ஆங்கிலத்திலும் பல நூல்களை எழுதியுள்ளார். அவரது நூல்கள் மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் மொழியாக்கம் பெற்றுள்ளன.
இந்த நூல், டாக்டர் நடராஜானின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி கொஞ்சமாகவும் அவர் விதையாய் இருந்து மப்பியல் துறையை விருட்சமாக வளர்த்தது பற்றி விளக்கமாகவும் கூறுகிறது.
-திருநின்றவூர் ரவிக்குமார்.
நன்றி: தினமலர், 20/3/2016.