யானைச் சொப்பனம்

யானைச் சொப்பனம், இரா.நாறும்பூநாதன் நூல் வனம், பக்.176, விலை ரூ.120.

நூலாசிரியர் முகநூலில் எழுதிய 59 பதிவுகளின் தொகுப்பு.நூலாசிரியரோடு தொடர்புடைய ஏதோ ஒருவிதத்தில் தொடர்புடைய/ தொடர்பில்லாத மனிதர்கள், இடங்கள், அவர் சந்திக்க நேர்ந்த உலக நடப்புகள் என பலவும் இந்தப் பதிவுகளின் பேசுபொருள்களாகியுள்ளன.

மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை, அயோத்திதாச பண்டிதர், குன்றக்குடி அடிகளார் ரசிகமணி டி.கே.சி, போன்றோருடன் அவருடைய ஆசிரியர்கள், நண்பர்கள் என பலரும் இப்பதிவுகளில் நம்மைச் சிலிர்க்க வைக்கின்றனர்.

பாளையங்கோட்டையில் பார்வைக்குறைபாடு உள்ளவர்களுக்கு தனிப் பள்ளியைத் தொடங்கிய அனி ஜேன், திருநெல்வேலியில் இரயில்வே ஸ்டேஷன் அமைத்தபோது, சாலை வசதி இல்லாததால் தனது சொந்தமான இடத்தை இலவசமாகக் கொடுத்து, சாலையும் அமைத்துக் கொடுத்த தங்கமீரான் முகமது கனி போன்றோரைப் பற்றிய தகவல்கள் நெகிழ வைக்கின்றன.

தனியார் நிறுவன வளர்ச்சிக்காக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வளர்ச்சியைத் தடுக்க அரசில் பொறுப்பிலிருந்தவர்களே முயற்சித்தது, ராணுவத்தில் பணியாற்றிய கணவன் இறந்து 36 ஆண்டுகளாகியும் 79 வயதான ஓர் அம்மாவுக்கு குடும்ப ஓய்வூதியம் தர இயலாமல் போன மெத்தனமான அரசு நிர்வாகம் போன்ற சூடான பதிவுகளும் உள்ளன. இன்றைய வாழ்வின் பல பரிமாணங்களை வெளிப்படுத்தும் சிறந்த தொகுப்பு.

நன்றி: தினமணி, 08/5/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *