திருவாசகம்

திருவாசகம் – மூலமும் உரையும், உரையாசிரியர்: தமிழ்ப்பிரியன், அருணா பப்ளிகேஷன்ஸ்,  பக்.552, விலை ரூ.200.

திருவாசகத்திற்கு தற்போது வெளிவரும் உரை நூல்கள் பாட்டின் பொருள் உணர்ந்த விளக்கவுரைகளாக இல்லை. நுட்பமான விளக்கவுரைகள் ஏற்கெனவே பல உள்ள ஒரு ஞான நூலுக்கு, மேன்மேலும் விளக்கவுரை எழுதுவது தேவையில்லாதது. இதனால், பாடல்களில் பிழை, பொருட்பிழை, அச்சுப்பிழை, ‘பா39’ வகைகளில் பிழை எனப் பல பிழைகள் மலிந்தே வெளிவருகின்றன. இந்நூலும் அதற்கு விதிவிலக்கல்ல. அதாவது, பத்தோடு பதினொன்றுதான் இந்நூல்.

சிவபுராணத்தில்,‘மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை 39’ என்பது திருத்தமான பாடல் வரி. ஆனால், ‘வாயிற் குழலை 39’ என்றுள்ளது. வாயில் குடில் என்றால், ஒன்பது ஓட்டைகள் உடைய மனித உடம்பு என்று பொருள். ‘குழல் 39’ என்பதன் பொருள் தலைமுடி, ஓர் இசைக்கருவி! அதே பதிகத்தில், ‘சொல்லித் திருவடிக்கீழ் 39’ என்பது, ‘சொல்லத் திருவடிக்கீழ் 39’ என்றுள்ளது.

கீர்த்தித் திருவகவலில், ‘கிராத வேடமொடு கிஞ்சுக வாயவள் 39’ என்பது, ‘இராத வேடமொடு 39’ என்றுள்ளது. கிராத வேடம் என்றால் – வேடன் உருவம் என்று பொருள். ‘இராத 39’ என்பதற்கு உரையாசிரியர்தான் பொருள் சொல்ல வேண்டும்.

திருவண்டப்பகுதியில், ‘கீடம் புரையும் கிழவோன் 39’ என்பது, ‘கடம் புரையும் 39’ என்றுள்ளது. கீடம் என்றால் சிறு புழு என்று பொருள். கடம் என்றால் என்ன பொருள்? இசைக்கருவியா? அடுத்து, ‘விண்முதற் பூதம் வெளிப்பட வகுத்தேன் 39’ என்பது, ‘வின் முதற் 39’ என்று இரண்டு சுழி உள்ளது. விண்- என்றால் ஆகாயம். வின்- என்றால் என்ன?

திருவம்மானை பதிகத்தில் 13ஆவது பாடலில், ‘சேர்ந்தறியாக கையானை 39’ என்பதற்கான உண்மையான விளக்கம் தரப்படவில்லை. இப்படிப் பல பொருட்பிழைகள். என்றாலும், எளிய விளக்க உரையுடன், சந்தி பிரிக்காமல் பாடல்களைத் தந்ததுடன், சொற்பொருள் விளக்கமும் தந்திருப்பதைப் பாராட்டலாம்.

நன்றி: தினமணி, 16/7/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *