நனைந்த நதிகள்
நனைந்த நதிகள், கவிஞர் தமிழ்தாசன், காவ்யா பதிப்பகம், பக். 120, விலை 100ரூ.
நனைந்த நதிகள் புத்தகம் முழுவதும் கவிதை துளிகளை தெளித்திருக்கிறார் கவிஞர் தமிழ்தாசன். ரத்தத் துளிகளால் எழுதப்பட்டது நம் சுதந்திர இந்திய வரலாறு தூசி படர்ந்து கிடக்கிறது என இது எங்கள் தேசம் என்ற தலைப்பில்(பக். 57) அவர் எழுதியுள்ள கவிதைகள் நடந்தவற்றை படம் பிடிக்கின்றன. சொல்லவந்த கருத்தை சுருங்கச் சொல்லி இருக்கும் முயற்சி பாராட்டுதற்குரியது.
நன்றி: தினமலர், 2/10/2016