பிரபாகரன் வாழ்வும் இயக்கமும்

பிரபாகரன் வாழ்வும் இயக்கமும், இந்திய சமூகநீதி ஊடக மையம், புதுயுகம், சென்னை, விலை 70ரூ.

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், அவர் போர் புரிந்த கால் நூற்றாண்டு காலத்தில், பல்வேறு பத்திரிகைகளுக்கு பேட்டியளித்து இருக்கிறார். அவற்றை தொகுப்பாசிரியர் பவா சமத்துவன் அற்புதமாக வரிசைப்படுத்தி இருப்பதால், இது பிரபாகரனின் சுயசரிதைபோல அமைந்துள்ளது. தன்னுடைய இளமைப்பருவம் பற்றி பிரபாகரன் கூறியுள்ள தகவல்கள் மனதைத் தொடுகின்றன. மகாபாரதத்தில் கர்ணனின் கதாபாத்திரம் தன்னை மிகவும் கவர்ந்ததாகவும், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் நேதாஜியின் செயல்பாடுகள் தன்னை வெகுவாக ஈரத்ததாகவும் கூறியுள்ளார். தனது போராட்டம் பற்றியும், இதர போராளிகளுடன் நடந்த மோதல்கள் பற்றியும் விவரித்துள்ளார். நிறைய படங்கள் இடம் பெற்றுள்ளன. மொத்தத்தில், பிரபாகரனை புதிய கோணத்தில் படம் பிடித்துக்காட்டும் சிறந்த புத்தகம். நன்றி: தினத்தந்தி, 30/7/2014.  

—-

அங்கீகாரம், சந்திரிகா பதிப்பகம், சென்னை, விலை 150ரூ.

மேடை நாடகம், திரைப்படம், டி.வி. நாடகம், டப்பிங், டி.வி. தொடர், வானொலி நாடகம், கதை, வசனம், தயாரிப்பு, இயக்கம் எனப் பல்வேறு பரிமாணங்களில் தன் பணியைச் செவ்வனே செய்த பி.ஆர். துரையின் 55 ஆண்டு கலையுலக அனுபவங்களைப் பதிவு செய்த வாழ்க்கை வரலாற்று நூல். ஐந்து ஆண்டுக்குள் சுமார் 2 ஆயிரம் நாடகம் வரை நடித்த நாடக அனுபவங்களை சுவைபட கூறுகிறார். இந்த நூல் நாடக நடிகர்களுக்கும், திரைப்பட நடிகர்களுக்கும் வெளிச்சத்தைக் கொடுக்கும். நன்றி: தினத்தந்தி, 30/7/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *