பூக்கள் எல்லாம் மாலைகளுக்காக

பூக்கள் எல்லாம் மாலைகளுக்காக, செங்கை பதிப்பகம், 349/166, அண்ணாசாலை, செங்கல்பட்டு603002, விலை 110ரூ.

பட்டணத்துப் பெண் சகுந்தலாவும், அத்தை மகன் வெங்கடேசும் ஒருவரை ஒருவர் விரும்புகின்றனர். அத்தை வீட்டில் பணத்தால் நிராகரிக்கப்படுகிறாள். அந்த வேதனையால் கிராமத்திலிருந்து பெண் கேட்டு வந்த சங்கரனை கணவனாக ஏற்றுக்கொள்கிறாள். கிராமத்து வாழ்க்கை ஒரு புதுவிதமான அனுபவத்தையும், சந்தோஷத்தையும் கொடுக்கிறது. அதேசமயம் சங்கரனின் பங்காளிகளால் உருவாக்கப்பட்ட சொத்து பிரச்சினையில் சங்கரன் கொலை குற்றம் சாட்டப்பட்டு துன்பமும், துயரமும் அனுபவிக்கின்றான். அன்பு, பாசம், துக்கம், இரக்கம் என்று எல்லா உணர்ச்சிகளிலும் தத்தளிக்கிறார்கள். இறுதியில் சங்கரன் வாழ்க்கை எவ்வாறு அமைகிறது என்பதை எளிய நடையில் யதார்த்த வாழ்க்கையை இனிய குடும்பக் கதையாக படைத்திருக்கிறார் நாவலாசிரியர் பாரததேவி. நன்றி: தினத்தந்தி, 2/7/2013.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *