மகா அவதார் பாபா

மகா அவதார் பாபா, வாசு. இராதாகிருஷ்ணன், மணிவாசகர் பதிப்பகம், விலை 60ரூ.

சிதம்பரம் அருகில் உள்ள பரங்கிப்பேட்டையில் கி.பி. 203ம் ஆண்டில் பிறந்தவர் பாபா. பெற்றோர் சுவேதநாத அய்யர் – ஞானம்பிகை. பெற்றோருக்கு 8வது பிள்ளையாகப் பிறந்த பாபாவின் இயற்பெயர் நாகராஜ். சிரஞ்சீவியான பாபா, இன்னமும் இமயமலையில் வாழ்வதாகக் கருதப்படுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாபா மீது மிகுந்த பக்தி கொண்டவர் என்பதும், அவர் வாழ்க்கை வரலாற்றை பாபா என்ற பெயரிலேயே திரைப்படமாக எடுத்ததும் அனைவரும் அறிவர். நூலாசிரியர் வாசு. இராதாகிருஷ்ணன், பாபா பற்றி பல ஆய்வுகள் நடத்தி, இந்த நூலை எழுதியுள்ளார். எளிய, இனிய நடையில், பாபா  பற்றிய அபூர்வ நூல்களை விவரித்துள்ளார். நன்றி: தினத்தந்தி.  

—-

நற்பேறுகள் தரும் குருபகவான், விஜயா பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 30ரூ.

நவகிரகங்களில் முக்கியமானவர் குருபகவான். ஜாதகம் பார்க்கும்போது குருபகவான் எந்த இடத்தில் இருக்கிறார் என்பதை முக்கியமாக கவனிப்பார்கள். குருபகவான் பற்றிய முழு விவரங்களையும் இந்த புத்தகத்தில் எழுதியுள்ளார் என். நாராயணராவ். நன்றி: தினத்தந்தி.

Leave a Reply

Your email address will not be published.