ஸ்ரீ பரப்பிரம்ம ரகசியம்
ஸ்ரீ பரப்பிரம்ம ரகசியம் (இந்து மத ஆன்மீகத் தலைமை), வி.என். கஜேந்திர குருஜி, ஸ்ரீ பரப்பிரம்மன் ஐந்தியல் ஆய்வு மையம், பக். 1279, விலை 800ரூ.
இந்தப் பிரபஞ்சத்தில் தோன்றிய முதல் ஆண், முதல் பெண் யார்? என்பதைத் தெரிந்துகொள்ள நாம் முயற்சி செய்திருக்கறோமா? இல்லை. ஆனால் அந்த ரகசியம் வெட்டவெளிச்சமாகி இருக்கிறது. உயிரினங்கள் வாழும் பூலோகம் என்பது, விண்சேர்க்கையும் பூமிச் சேர்க்கையும் ஒன்றுசேர்ந்த இடமாகும். பூலோகத்தில் ஆண்தன்மையும், பெண்தன்மையும்இணைந்து அலித் தன்மையில் ஓர் உருவம் என அமைந்ததுதான் ஸ்ரீபரப்பிரம்மம். அந்தப் பிரம்மம் ஆண்-பெண் சக்திகள் பிரியாது வேத ஸ்லோகத்தின்படி துளைப்பன, ஊர்வன, நீந்துவன, பறப்பன, நடப்பன ஆகிய ஐந்துவித உயிரினங்களும் நடுநாயகம் எனவும் மனித உருவல் ஆரம்ப நிலையில் உருவானதால் முதல் உருவம் என்றும் கூறுகிறோம். இப்படிப்பட்ட ஸ்ரீபரப்பிரமம் உலகத்தையும் படைத்து அதில் குறிப்பாக மனித இன முதல் ஆண் ஸ்ரீவிஸ்வர்மா, முதல் பெண் ஸ்ரீவிஸ்வகர்மிணி என்றும் ஸ்ரீ காயத்திரியைப் படைத்ததனால் படைப்புக் கடவுள் என்றும், பராபரம் என்றும், ஸ்ரீபிரம்மம் என்றெல்லாம் போற்றப்படுகிறது என்று பிரம்மத்தின் சிறப்பு முதலில் விளக்கப்பட்டுள்ளது. யார் முதல் கடவுள், விஸ்வகர்மா, வேதங்கள், மனு, பஞ்ச பூதங்கள், அஷ்ட பாலகர்கள், 18 வகை ஸ்மிருதிகள், 51 சக்தி பீடங்கள், 64 சக்தி பீடங்கள், 63 நாயன்மார்கள், 64 கலைகள், 12 ஆழ்வார்கள், 125 வேத உப ரிஷிகள், 21 நரகங்கள், 18 வகை பூத கணங்கள், 21 வகை யாகங்கள், 14 மனுக்கள், 9 வகை ஆலயங்கள், 8 வகை அஷ்ட பந்தன மருந்துகள், 64 திருவிளையாடல்கள், 11 வகை கரணங்கள், பஞ்ச சொல் அகராதி, பிரம்ம நிலை அகராதி, புராணங்கள் என 200க்கு மேற்பட்ட தலைப்புகளில் ஒரு தொகை அகராதியாக இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் இந்துமதத் தத்துவங்களின் அரிய பல தகல்களை உள்ளடக்கிய ஒரு களஞ்சியமாகத் திகழ்கிறது. நன்றி: தினமணி, 31/8/2015.