அகப்பறவை

அகப்பறவை, பூங்குழலி வீரன், அகம் பதிப்பகம், விலை 100ரூ.

மரங்களைப் பாடுதல்

மரங்கள், மழை, கவிதை குறித்த அனுபவங்கள் இவற்றால் ஆனது மலேசியக் கவிஞர் பூங்குழலி வீரனின் அகப்பறவை என்னும் இக்கவிதைத் தொகுப்பு. மரங்களை தன் உறவுகளாகவும், அவற்றின் பதியன்களை பிரியத்தோடும் நோக்கும் இவரது உலகில் இலைகள் வீழ்வதும் சூரியன் மேற்கே வீழ்வதும் ஒருங்கே நிகழ்கையில் அன்பு முகிழ்கிறது.

தொலைபேசியில் இருக்கும் எண்களில் இருந்து
இறந்தவர் யாராவது அழைத்துவிடும்
அச்சம் மட்டும்
அவ்வப்போது வந்து போகிறது

-என்கிறார் பூங்குழலி.

நம் தொலைபேசியில் இருக்கும் இறந்துபோனவர்களின் எண்கள் ஞாபகத்துக்கு வந்துவிடுகின்றன.

எண்ணற்ற மழைத்துளிகளைப்
பத்திரப்படுத்தியிருந்த
அந்த ஒற்றை மரம்
இனி ஒரு இலையால்
அறியப்படக்கூடும்
-இதுபோன்ற வரிகளால் நிரம்பியிருக்கிறது இத்தொகுப்பு.

நன்றி: அந்திமழை, ஜுன் 2018.

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027058.html

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *