ஸ்ரீ தியாக பிரம்மத்தின் நாதோபாசனையின் வழிமுறைகள்

ஸ்ரீ தியாக பிரம்மத்தின் நாதோபாசனையின் வழிமுறைகள், பிரபோதரன் சுகுமார், அயக்கிரிவா பதிப்பகம், பக்.320, விலை ரூ.190.

சங்கீத மும்மூர்த்திகளுள் முதன்மையானவர் நாதபிரம்மமான தியாகராஜர். இவர் ஆயிரக்கணக்கான கீர்த்தனைகளை உருவாக்கி இருக்கிறார். இக்கீர்த்தனைகள் தெய்வீகத் தன்மை வாய்ந்தவை.

தியாகய்யாவின் நாதோபாசனையானது தம்பூராவை மீட்டி கைத்தாளம் போட்டு இக்கீர்த்தனை, இந்த ராகம், அந்த தாளம் என்று பகுப்பாய்வு செய்து பாடும் முறையன்று. மாறாக, தெய்வீக கீர்த்தனைகள் மூலம் பஞ்ச பூதங்களும் மற்றும் பிராகிருதியின் செயல்களை அடக்கி வைக்கும் முறையே நாதோபாசனை ஆகும். இந்த நாதோபாசனை முறையில் இறைவனை வழிபட்டவரே தியாக பிரம்மம்!

மனிதன் தன்னுடைய வெளிப்பார்வையின் ஓட்டத்தை தனக்குள் கட்டுப்படுத்தி அதன் நிலையற்ற அலைக்கழிப்பை சீர்படுத்தி வைத்துக் கொள்வதே யோகத்தின் முதல் முயற்சி என்பதாகும். நினைவின் குற்றம் நீங்குதலே பிரணவத்தின் ஓங்காரம்.

ஓங்காரமே பேரரறிவு பெறுதலாகும். ஆத்ம ஞானம் அடைதல் என்பதும் அதையே குறிக்கும். உயிர் மூச்சினை வெளிக் காணும் முறை, பஞ்ச பூதங்கள் செயல்படும் நிலைகள், அதன் ஏற்றத் தாழ்வுகள், சப்த தாதுக்கள், சப்த ஸ்வரங்கள் உயிரின் விழிப்புணர்ச்சியைப் பெறுதல், பேச்சின் மகத்துவம் பொருந்திய தெய்வீகத் தன்மைகள், அறிவின் ஏழு நிலைகள், யோக நித்திரை, நாபி, பிந்து கலையின் இயக்கம், தியாகராஜர் வெற்றி கண்ட பஞ்சமம் சித்தி போன்ற அனைத்து விதமான தகவல்களையும் உள்ளடக்கியது இந்நூல்.

நன்றி: தினமணி, 16/2/2018

Leave a Reply

Your email address will not be published.