தெய்வ வழிபாட்டு தத்துவ இரகசியங்கள்

தெய்வ வழிபாட்டு தத்துவ இரகசியங்கள், பிரபோதரன் சுகுமார், அயக்கிரிவா பதிப்பகம், பக்.384, விலைரூ.200. அமரகவி சித்தேஸ்வரரின் நிஜானந்த போதம் நூலைத் தழுவி எழுதப்பட்டது இந்நூல். இந்து மதத்தில் ஏன் இத்தனை தெய்வங்கள்? இந்த தெய்வங்களுக்கு ஏன் இத்தனை கைகள், தலைகள், ஆயுதங்கள், வாகனங்கள் என ஆன்மிக அன்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் எழக்கூடிய கேள்விகளுக்கு விடைதருவதாக அமைந்துள்ளது இந்நூல்.  இந்நூலில் விரவிக்கிடக்கும் ஆன்மிக முத்துக்குவியலில் இருந்து சில முத்துகள். இறைவன் எல்லையற்ற ஞானம் மிக்கவன், எல்லையற்ற பேராற்றல் படைத்தவன், எங்கும் நீக்கமற நிறைந்தவன். கோயில், குளங்களை சுற்றிவருவதும், […]

Read more

ஸ்ரீ தியாக பிரம்மத்தின் நாதோபாசனையின் வழிமுறைகள்

ஸ்ரீ தியாக பிரம்மத்தின் நாதோபாசனையின் வழிமுறைகள், பிரபோதரன் சுகுமார், அயக்கிரிவா பதிப்பகம், பக்.320, விலை ரூ.190. சங்கீத மும்மூர்த்திகளுள் முதன்மையானவர் நாதபிரம்மமான தியாகராஜர். இவர் ஆயிரக்கணக்கான கீர்த்தனைகளை உருவாக்கி இருக்கிறார். இக்கீர்த்தனைகள் தெய்வீகத் தன்மை வாய்ந்தவை. தியாகய்யாவின் நாதோபாசனையானது தம்பூராவை மீட்டி கைத்தாளம் போட்டு இக்கீர்த்தனை, இந்த ராகம், அந்த தாளம் என்று பகுப்பாய்வு செய்து பாடும் முறையன்று. மாறாக, தெய்வீக கீர்த்தனைகள் மூலம் பஞ்ச பூதங்களும் மற்றும் பிராகிருதியின் செயல்களை அடக்கி வைக்கும் முறையே நாதோபாசனை ஆகும். இந்த நாதோபாசனை முறையில் இறைவனை வழிபட்டவரே […]

Read more

வரலாறு படைத்த மாமனிதர்கள்

வரலாறு படைத்த மாமனிதர்கள், நேஷனல் பப்ளிஷர்ஸ், சென்னை, விலை 90ரூ. முன்னாள் ஜனாதிபதிகளான ஜாகீர் உசேன், அப்துல் கலாம், மவுலானா அபுல் கலாம் ஆஸாத், மகாகவி இக்பால் உள்பட 9 மாமனிதர்கள் பற்றிய வரலாறு. இவர்களின் வாழ்க்கை, இளைஞர்கள் பின்பற்ற வேண்டிய முன்மாதிரி வாழ்க்கை என்பதை ஆசிரியர் சி.எஸ். தேவநாதன் எளிய நடையில் எடுத்துரைக்கிறார். நன்றி: தினத்தந்தி, 16/9/2015.   —- ஆன்மிக ஞானத்தின் ஏழாம் அறிவு, பிரபோதரன் சுகுமார், அயக் கிரிவா பதிப்பகம், சென்னை, விலை 180ரூ. யோக சாதனைகளின் முயற்சியில் இறங்குவதற்கு […]

Read more

சுரதா

சுரதா, ஆர். குமாரவேலன், சாகித்ய அகடமி, பக். 128, விலை 50ரூ. உவமைக் கவிஞர் என்று பலராலும் புகழப் பெற்றவர். 85 ஆண்டு காலம் (1921-2006) உடையில் தூய்மை, நட்பில் தூய்மை என்று எங்கும் எப்போதும் தூய்மையாகவே வாழ்ந்து காட்டியவர். அவரது வாழ்க்கை வரலாற்றை மிக அருமையாக, எளிமையாக எழுதியிருக்கிறார் ஆசிரியர். -சிவா.   —-   நெரூர் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள் சரிதை, பிரபோதரன் சுகுமார், ஹயக்ரீவா பப்ளிகேஷன்ஸ். பதினெட்டா நூற்றாண்டில் வாழ்ந்து ஜீவ சமாதி அடைந்த ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள் சமாதி […]

Read more

துக்காராம்

துக்காராம், பால சந்திரா நெமதே, தமிழாக்கம்-ஆர்.கே. நாகு, சாகித்ய அகடமி, குணா பில்டிங்ஸ், தேனாம்பேட்டை, சென்னை 600018, பக். 136, விலை 50ரூ. மகாராஷ்டிரா மாநிலத்தில், பக்தி நெறியை பரப்பியவர்களில் மிக முக்கியமானவர் துக்காராம். 13ம் நூற்றாண்டில் தோன்றிய வரகரி இயக்கத்தின் மிக முக்கியமான அங்கமாக திகழ்ந்தவர். ஜாதிப் பாகுபாடுகளை ஏற்காமல், எல்லாரும் சமம் என்ற கோட்பாட்டை கொண்டது இந்த இயக்கம். அப்போது மித மிஞ்சிய ஆணவப் போக்கோடு இருந்த பிராமணீயத்தை சரிக்கட்டும் மாற்றுச் சக்தியாய் இயங்கிய வரகரி இயக்கத்தை லட்சக்கணக்கான மக்களிடையே பரப்பியவர் […]

Read more

விகடன் சுஜாதா மலர்

விகடன் சுஜாதா மலர், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 165ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-863-0.html புதுமைத் தமிழுக்கு சொந்தக்காரர் சுஜாதா. கம்ப்யூட்டர் என்ஜினீயராக இருந்த அவர் கடினமான விஷயங்களையும், புரிகிற மாதிரி எழுதுவதில் வல்லவராகத் திகழ்ந்தார். கதை, கட்டுரை, சிறுகதை எதிலும் புதுமை. சிவாஜி உள்பட பல திரைப்படங்களுக்கும் வசனம் எழுதினார். அவரைப்பற்றி விகடன் வெளியிட்டுள்ள இந்த மலரில், சுஜாதா பற்றி கவிஞர் வாலி, ஓவியர் ஜெயராஜ், அமுதவன் உள்பட பலர் கட்டுரைகள் எழுதியுள்ளனர். […]

Read more