வரலாறு படைத்த மாமனிதர்கள்

வரலாறு படைத்த மாமனிதர்கள், நேஷனல் பப்ளிஷர்ஸ், சென்னை, விலை 90ரூ.

முன்னாள் ஜனாதிபதிகளான ஜாகீர் உசேன், அப்துல் கலாம், மவுலானா அபுல் கலாம் ஆஸாத், மகாகவி இக்பால் உள்பட 9 மாமனிதர்கள் பற்றிய வரலாறு. இவர்களின் வாழ்க்கை, இளைஞர்கள் பின்பற்ற வேண்டிய முன்மாதிரி வாழ்க்கை என்பதை ஆசிரியர் சி.எஸ். தேவநாதன் எளிய நடையில் எடுத்துரைக்கிறார். நன்றி: தினத்தந்தி, 16/9/2015.  

—-

ஆன்மிக ஞானத்தின் ஏழாம் அறிவு, பிரபோதரன் சுகுமார், அயக் கிரிவா பதிப்பகம், சென்னை, விலை 180ரூ.

யோக சாதனைகளின் முயற்சியில் இறங்குவதற்கு முன், அதன் சரியான வழிமுறைகளை அறிந்து கொள்ள வேண்டும். இந்தப் புத்தகத்தின் கதாநாயகர் ஆன அமரகவியின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவையான நிகழ்ச்சிகள் முன்பகுதியில் விளக்கப்படுகின்றன. இரண்டாம் பகுதியில், யோக பயிற்சி முறைகள் விளக்கப்படுகின்றன. ஆன்மிகத்திலும் யோகத்திலும் அனுபவம் உள்ளவர்களுக்கு உகந்த புத்தகம். நன்றி: தினத்தந்தி, 16/9/2015.  

—-

பக்தித் தமிழ், என். சொக்கன், சூரியன் பதிப்பகம், விலை 160ரூ.

பக்தி இலக்கியங்களில் உள்ள உட்பொருளையும், இனிமையையும் இறைவனே அவற்றை விரும்பும் மகிமையையும் அனைவரும் உணரும் வகையில் தொகுக்கப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 16/9/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *