முகமற்றவர்களின் அரசியல்

முகமற்றவர்களின் அரசியல், கே.எம். சரீப், உயிர்மை பதிப்பகம், விலை 110ரூ.

ஆதிக்க வர்க்கம் அதிகாரப் பசி கொண்டு அலைகிறது. அதிகாரத்திற்கு மாற்று வழியாக, மதவெறியை அது பயன்படுத்தப் பார்க்கிறது. மனித மூளைகளில் மத விஷம் ஏற்றுகிறது. தேசத்தை மரண வாயில் நோக்கி அது அழைத்துச் செல்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான வாழ்வியல் தேவைகள் இங்கே பூமிக்குக் கீழே புதைக்கப்படுகிறது. புதிய சமூகம் படைப்போம் என பிணந்தின்னும் பிசாசுகளே, இங்கே கூக்குரலிடுகின்றன. அரசியல் கட்சிகள் அடித்தட்டு மக்களின் ரத்தம் குடித்து மகிழ்கின்றன. இஸ்லாமியர்களும் சாமான்ய மக்களும் இங்கே ஒடுங்கி வாழ மட்டுமே கற்பிக்கப்படுகின்றன. மதவெறியின் கொடுங்கரங்கள் மனித தர்மத்தை விழுங்கிவிடுகின்றன. பாதிக்கப்பட்டவர்கள் உயிர்வாழ, பாஸிஸ்டுகளுடன் இசைந்துபோவதைத் தவிர வேறு வழியில்லை என்கிற புதிய சித்தாந்தம் வகுக்கப்படுகிறது. இந்நிலையில்தான் மதவெறிக்கும் சாதி வெறிக்கும் பணவெறிக்குமான மாற்றை சிந்திக்க வேண்டிய தேவை, அறம் சார்ந்து சிந்திப்பவர்களுக்கு அவசியமாகிறது. -கே.எம். சரீப். நன்றி: தி இந்து, 31/10/2015.  

—-

இராமகாதை முதலும் வழியும், முனைவர் தெ. ஞானசுந்தரம், வானதி பதிப்பகம், சென்னை, விலை 200ரூ.

வான்மீகத்தின் அயோத்தியா காண்டத்தோடு கம்பராமாயணத்தின் அயோத்தியாகாண்டம் ஒப்பீட்டு ஆய்வு செய்யப்பட்டு நூலாக தொகுக்கப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 4/11/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *