சுரதா

சுரதா, ஆர். குமாரவேலன், சாகித்ய அகடமி, பக். 128, விலை 50ரூ.

உவமைக் கவிஞர் என்று பலராலும் புகழப் பெற்றவர். 85 ஆண்டு காலம் (1921-2006) உடையில் தூய்மை, நட்பில் தூய்மை என்று எங்கும் எப்போதும் தூய்மையாகவே வாழ்ந்து காட்டியவர். அவரது வாழ்க்கை வரலாற்றை மிக அருமையாக, எளிமையாக எழுதியிருக்கிறார் ஆசிரியர். -சிவா.  

—-

 

நெரூர் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள் சரிதை, பிரபோதரன் சுகுமார், ஹயக்ரீவா பப்ளிகேஷன்ஸ்.

பதினெட்டா நூற்றாண்டில் வாழ்ந்து ஜீவ சமாதி அடைந்த ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள் சமாதி நெரூரில் (கரூர் அருகில்) உள்ளது. ஒரு புண்ணிய க்ஷேத்திரத்திற்கு இணையாக, அன்பர்களால் போற்றிப் புகழப்படும் பகுதி இது. இவர் தனது ஆன்மிக ஸாதனாவில் பல அற்புதங்களை நிகழ்த்தியதாக அன்பர்களால் பேசப்படுவதுண்டு. புதுக்கோட்டை சமஸ்தானத்தின் ஆதரவு பெற்ற இவர், சில சமஸ்கிருத நூல்களில் எழுதியுள்ளார். மூன்று இடங்களில் இவர் ஜீவ சமாதி அடைந்துள்ளதாகவும் அன்பர்களால் சொல்லப்படுகிறது. இவரைப் பற்றிய ஒரு முழுமையான தகவல்கள் அடங்கிய நூலாக பிரபோதரன் சுகுமார் இதை எழுதியுள்ளார். நிறைய வண்ணப்படங்கள், பல சுவையான ஆன்மிக தகவல்கள் உள்ளன. -ஜனகன். நன்றி: தினமலர், 9/10/13.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *