விகடன் சுஜாதா மலர்
விகடன் சுஜாதா மலர், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 165ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-863-0.html
புதுமைத் தமிழுக்கு சொந்தக்காரர் சுஜாதா. கம்ப்யூட்டர் என்ஜினீயராக இருந்த அவர் கடினமான விஷயங்களையும், புரிகிற மாதிரி எழுதுவதில் வல்லவராகத் திகழ்ந்தார். கதை, கட்டுரை, சிறுகதை எதிலும் புதுமை. சிவாஜி உள்பட பல திரைப்படங்களுக்கும் வசனம் எழுதினார். அவரைப்பற்றி விகடன் வெளியிட்டுள்ள இந்த மலரில், சுஜாதா பற்றி கவிஞர் வாலி, ஓவியர் ஜெயராஜ், அமுதவன் உள்பட பலர் கட்டுரைகள் எழுதியுள்ளனர். சுஜாதாவின் சிறந்த படைப்புகளும் இடம் பெற்றுள்ளன. மணம் உள்ள மலர்.
—-
இயர்புக் 2013, தமிழ் இனியன், அறிவுக்கடல் பதிப்பகம், 3262, தமிழ்நாடு வீட்டு வசதிவாரிய குடியிருப்பு, வில்லாபுரம், மதுரை 625011, விலை 150ரூ.
தமிழில் இயர் புக் என்ற வரிசையில் பல நூல்கள் வெளிவந்து இருந்தாலும் இந்த புத்தகம் வினா விடை வடிவில் தொகுக்கப்பட்டு இருப்பதால், போட்டி தேர்வாளர்களுக்கு ஏற்றவாறு அமைந்து இருக்கிறது. 2012ல் நடந்த அனைத்து நடப்பு நிகழ்வுகளும் தேதி வாரியாக கொடுக்கப்பட்டுள்ளன. பெட்டி செய்தியாக எழுதிய குறிப்புகள் இடையிடையே இடம் பெற்றிருப்பது தனிச்சிறப்பு.
—-
ஆன்மிக ரகசியங்கள், பிரபோதரன் சுகுமார், அயக்கிரிவா பதிப்பகம், 76, பெரிய தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 5, விலை 90ரூ.
ஆன்மிகத்தைப் பற்றிய 865 கேள்விகளும் அதற்கான பதில்களும் உள்ளன. இதுவரை கேள்விப்படாத கேள்விகள் இதில் ஏராளமாக உள்ளன. நன்றி; தினத்தந்தி, 20/3/13.