பிசினஸ் டிப்ஸ்
பிசினஸ் டிப்ஸ், சதீஷ் கிருஷ்ணமூர்த்தி, கிழக்கு பதிப்பகம், பக்.128, விலை140.
சொந்தமாகத் தொழில் செய்ய விழைவோருக்கு எளிமையான, கலகலப்பான மொழியில் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார் சதீஷ் கிருஷ்ணமூர்த்தி.குட்டி, குட்டியாக இருபத்து மூன்று அத்தியாயங்களாகப் பிரித்து, புதிதாகத் தொழிலில் முனைவோருக்கு உந்து சக்தியாக இருக்கும் வகையில் நூலை வடிவமைத்திருக்கிறார்.
புதிதாய் பணியில் சேரும் ஓர் ஊழியரின் முதல் நாள் அனுபவம் அவருக்கு மறக்க முடியாதவண்ணம் அமைவதற்கு என்ன செய்கிறீர்கள்? என்று கேட்கும் சதீஷ், ஓர் அருமையான யோசனையை முன்வைக்கிறார்.
நீங்கள் பணிக்கு அமர்த்தும் புதிய ஊழியரை வரவேற்க ஒரு திட்டம் வகுத்து, அதைப் புத்தகமாக்கி, மற்ற சட்ட, திட்ட, வழிமுறை, நெறிமுறை கையேடுகளுடன் சேர்த்து நடைமுறைக்குக் கொண்டு வாருங்கள் என்கிறார்.
ஓர் ஊழியரின் விசுவாசத்தை முழுவதுமாகப் பெற இது போன்ற எளிய, ஆனால் உளரீதியாக அழுத்தமான சிறு நடத்தைகள் மிகவும் உதவும்.நமது அலுவல்களில் ஏற்படும் மன பளு, அழுத்தம் -இவையே நமது வெற்றிக்கான உந்து சக்தியாக மாறுகிறது என்பதை ஓர் அத்தியாயத்தில் சுவைபட விவரிக்கிறார்.
மன அழுத்தத்துடன் ஒரு செயல்பாட்டில் இறங்கும்போது நமது உடலில் என்னென்ன நடக்கிறது என்று அவர் விளக்குவதைத் தெரிந்து கொள்வது அனைவருக்கும் பயன் தரக் கூடியது.
தொலைக்காட்சி பார்ப்பது, கிரிக்கெட் விளையாட்டு என்று அன்றாடம் நாம் எதிர்கொள்ளும் விஷயங்களை உதாரணமாக்கிப் பல யோசனைகளைச் சொல்கிறார்.சிறுதொழில் செய்வோர், சிறுதொழிலில் இறங்கத் துணியாது, சந்தேகித்துக் காத்திருப்போருக்கு இந்தப் புத்தகம் நல்ல அறிமுகமாக இருக்கும் என்றாலும், அப்படி அல்லாத ஒரு சாதாரண வாசகருக்கும் பயன் அளிக்கக் கூடியது.
நன்றி: தினமணி, 25/11/19
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/9789351350248.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818