காவிரி நீரைப் பாதுகாப்போம் டெல்டா விவசாயத்தைக் காப்போம்
காவிரி நீரைப் பாதுகாப்போம் டெல்டா விவசாயத்தைக் காப்போம், சக்தி கதிரேசன், மணிமேகலைப் பிரசுரம், சக்தி கதிரேசன், மணிமேகலைப் பிரசுரம், விலை 200ரூ.
தமிழகம் கர்நாடகம் இடையேயான காவிரி நீர் பங்கீடு, நமக்குக் கிடைக்கும் காவிரி நீரை எவ்வாறு சேதாரம் இல்லாமல் செலவு செய்து அதிக மகசூல் பெறுவது என்பவற்றை ருசிபடக் கூறுவதற்காக நாவல் வடிவில் அமைக்கப்பட்டுள்ள இந்த நூல், காவிரி நீர் தொடர்பான அத்தனை தகவல்களையும் தருகிறது.
இந்த நாவலில் குறிப்பிடப்பட்டுள்ள புதிய காவிரி நீர் மேலாண்மைத் திட்டங்கள் மூலம் அதிக நீரை பாதுகாத்து, நீலகிரி காவிரி திட்டம் மற்றும் நீர் மேலாண்மைத் திட்டங்கள் மூலம் அதிக நீர் பெற்று டெல்டா விவசாயத்தைப் பாதுகாக்கலாம் என்றும் உறுதிபடக்கூறப்பட்டுள்ளதோடு, புதிய விவசாயத் திட்டங்கள் மற்றும் சாகுபடிக் குறிப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன.
நன்றி: தினத்தந்தி, 31/7/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818