ஜி.எஸ்.டி. ஓர் அறிமுகம்
ஜி.எஸ்.டி. ஓர் அறிமுகம், பாலாஜி பதிப்பகம், விலை 500ரூ.
சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் எனப்படும் ஜி.எஸ்.டி. 1/7/17 முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சரக்குக்கு இந்தியா முழுவதும் ஒரே வரிவிகிதம் தான். இன்னொரு மாநிலத்தில் வாங்கினால் வரி குறைவு என்ற பேச்சுக்கே இடமில்லை. இதனால்தான் ஒரே தேசம் ஒரே வரி எனப்படுகிறது. ஜம்மு காஷ்மீர் தவிர எல்லா மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றுக்கு இந்த வரி பொருந்தும்.
இந்தச் சட்டத்தில் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படைச் செய்திகளை வணிகம் செய்வோர் அனைவருமே தெரிந்து கொள்வது நலம். அதன் அடிப்படையில் ஓய்வு பெற்ற வணிகவரி அதிகாரி எஸ். சவுந்தர்ராஜ், இந்த நூலில் ஜி.எஸ்.டி. குறித்து விரிவாகவும், எளிமையாகவும் எழுதியுள்ளார். எந்தெந்த இனங்கள் வினியோகம், எது சரக்கு வினியோகம்? எது சேவை வினியோகம்? வினியோக நேரம், வினியோக இடம், வினியோக மதிப்பு, இன்வாய்ஸ் போடுதல், வரி செலுத்துதல், ரிட்டன் தாக்கல் செய்தல் போன்ற பல முக்கிய விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
நன்றி: தினத்தந்தி, 9/8/2017.