இந்துத்துவ அம்பேத்கர்

இந்துத்துவ அம்பேத்கர், ம. வெங்கடேசன், கிழக்கு பதிப்பகம், பக். 208, விலை 150ரூ.

To buy this Tamil book online: http://www.nhm.in/shop/9789384149673.html

தீண்டாமை காரணமாக இந்து மதத்தை விட்டு வெளியேறி பௌத்த மதத்தைத் தழுவியவர் அம்பேத்கர். அம்பேத்கரை அவரது வாழ்நாளில் எதிர்த்த காங்கிரஸாரும் கம்யூனிஸ்டுகளும் இன்று அவரது பெயரை உச்சரிப்பதுதான் அம்பேத்கரின் வெற்றி. அதேசமயம், இந்து மதத்தை கடுமையாக நிராகரித்த அம்பேத்கரை இந்துத்துவர்கள் மிகவும் போற்றுவது எப்படி? இந்நூல் இக்கேள்விகளுக்கு விளக்கமளிக்கிறது.

இந்துத்துவர்களும் அம்பேத்கரும் சிந்தனை ரீதியாக ஒத்திருக்கும் இடங்களை நூலாசிரியர் இந்நூலில் தொகுத்திருக்கிறார். அம்பேத்கரின் நூல்களிலிருந்தே ஆதாரத்துடன் நூலாசிரியர் அவற்றைச் சுட்டிக்காட்டுகிறார். நாட்டின் தேசிய மொழியாக சமஸ்கிருதமும் இந்தியும் ஏற்கப்பட வேண்டும். ஆரிய திராவிட வாதம் பொய்யானது. பொது சிவில் சட்டம் தேவை. தேசப்பிரிவினை கூடாது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கக்கூடாது என இந்துத்துவர்கள் கூறுவதையே அம்பேத்கரும் கூறியிருப்பதை அவரது கருத்துக்களின் அடிப்படையில் நிறுவுகிறார் நூலாசிரியர்.

இந்து மகாசபை தலைவர்கள் மூஞ்சே, சாவர்க்கர், ஜெயகர், ஆர்எஸ்எஸ். தலைவர் குருஜிகோல்வல்கர், தத்தோபந்த் தெங்கடி ஆகியோருடன் நெருங்கிய தோழமை கொண்டிருந்தவர் அம்பேத்கர் என்பதும் இந்நூலின் மூலம் தெரிய வருகிறது. நூலாசிரியரின் கடின உழைப்பு வியக்க வைக்கிறது.

நன்றி: தினமணி, 21/3/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *