கதை திரைக்கதை வசனம் இயக்கம்
கதை திரைக்கதை வசனம் இயக்கம், இரா. பார்த்திபன், டிஸ்கவரி புக் பேலஸ், விலை 250ரூ.
திரைக்கதை திரையான கதை
எதையும் வித்தியாசமாகச் செய்யும் முனைப்பே ஒரு படைப்பாளியாக பார்த்திபனின் அடையாளம். அவர் எழுதி இயக்கி வெற்றி பெற்ற ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ சினிமா அப்படியான முயற்சிக்கு ஓர் புத்தகம் இப்போது வெளியாகியுள்ளது.
இப்படத்தின் திரைக்கதை, திரைக்கதை எழுதுபவர்களைப் பெரிதும் ஈர்த்திருந்தது. குறிப்பிட்ட கதாபாத்திரம் எந்த நிலையில் இருக்க வேண்டும், என்ன ஆடையை எப்படி அணிந்திருக்கவேண்டும் என்பது உட்பட அனைத்து விவரங்களும் நூலில் தரப்பட்டிருக்கின்றன.
இப்படியான நுணுக்கமான விவரங்கள் இப்புத்தகத்தை, திரைக்கதை பழகுவதற்கான பயிற்சி நூலாக ஆக்குகிறது. புத்தகத்தைப் படித்த பின் படத்தை மீண்டும் பார்க்க ஆகூல் எழும் என்பதை உணர்ந்து படத்தின் டிவிடியையும் புத்தகத்துடன் இணைத்திருக்கிறார்கள்.
-எஸ்.கோபாலகிருஷ்ணன்.
நன்றி:தி இந்து, 29/9/2018.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027151.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818