ம.ப.பெரியசாமித் தூரன் நினைவுக் குறிப்புகள்
ம.ப.பெரியசாமித் தூரன் நினைவுக் குறிப்புகள், பதிப்பாசிரியர் சிற்பி பாலசுப்பிரமணியம், சாகித்ய அகாதெமி, விலை 260ரூ.
கலைக்களஞ்சியனின் கதை இந்திய மொழிகளிலேயே முதன்முதலாகத் தமிழில் கலைக்களஞ்சியம் உருவாகக் காரணமானவர் பல்துறை அறிஞரான பெரியசாமித் தூரன். முதுமைக் காலத்தில் நோய்ப்படுக்கையிலிருந்து அவர் கூறிய எண்ணப் பதிவுகளைக் குடும்பத்தாரிடமிருந்து பெற்றுத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார் சிற்பி பாலசுப்பிரமணியம்.
கலைக்களஞ்சியம் உருவான கதையை மட்டுமல்ல, அதற்காக தூரன் செய்த தியாகங்களையும் சொல்கிறது இந்தத் தொகுப்பு. குடும்பச் செலவுக்குப் போதாத ஊதியத்தில்தான் கலைக்களஞ்சியத் தலைமையாசிரியராகப் பொறுப்பேற்றார் தூரன். எனினும், இருமடங்கு ஊதியத்தில் வானொலியில் கிடைத்த வேலையைத் தனது கனவுப் பணிக்காக ஏற்க மறுத்தவர் அவர். தூரனை மட்டுமில்லை அவரது காலத்தில் வாழ்ந்த தி.சு.அவினாசிலிங்கம், கல்கி என்று மாமனிதர்கள் பலரையும் அறிந்துகொள்ள உதவுகிறது இந்நூல்.
-புவி
நன்றி: தமிழ் இந்து, 13/7/19
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818