மீன்கள் உறங்கும் குளம்
மீன்கள் உறங்கும் குளம், பிருந்தா சாரதி, டிஸ்கவரி புக் பேலஸ், விலை 100ரூ.
கவிதை வடிவங்களிலேயே யாரையும் மயக்கக்கூடிய வசிய சக்தி ஹைக்கூவுக்கு இருக்கிறது. யாரையும் படிக்கத் தூண்டும் அந்தச் சின்ன, சிறிய மூன்றடி வடிவம், அழகான படிமங்களால் நுட்பமான வெளியீட்டு முறை, அதன் எளிமை ஆகியவையே ஈர்ப்புக்குக் காரணம். அந்த வகையில் பிருந்தா சாரதி எழுதிய இந்த ஹைக்கூ கவிதைகள் நெஞ்சை அள்ளுகின்றன.
மணல் வீடு கட்டி
விளையாடுகிறது
அகதியின் குழந்தை.
‘இரு நாட்டுக் கொடிகளையும்
ஒரே மாதிரி அசைக்கிறது
எல்லையில் வீசும் காற்று.
என்பன போன்ற சுவையான கவிதைகள்
நன்றி: தினத்தந்தி, 30/1/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818