மவுண்ட் பேட்டன் பிரபு
மவுண்ட் பேட்டன் பிரபு, ஜெகதா, செண்பகா பதிப்பகம், விலைரூ.175
பிரிட்டிஷ் சாம்ராஜ்ய ராஜதந்திரியாக நிர்வாகத் திறமை கொண்ட மவுண்ட் பேட்டன் பற்றிய நுால். இந்தியாவில் பெரும் பதவி வகித்தவரின் வாழ்க்கை வரலாறு, 32 தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளது.
அறியாத செய்திகளைத் தகவலாக தந்துள்ளார். நேருவுடன் இருந்த ஆழமான நட்பு, படேல், காந்தி போன்றோரிடம் மதிப்பு, முகமது அலி ஜின்னாவின் பிடிவாதம் போன்றவை புதிய தகவலோடு எடுத்தாளப்பட்டுள்ளன.
படேல் – நேரு முரண்பாடு, மவுண்ட் பேட்டன் கருத்துகளுக்கு எதிர்ப்பும், மறுப்பும் தெரிவித்தது, ஜின்னா இந்தியாவை இரண்டாக்க வேண்டும் என்பதில் கொண்டிருந்த பிடிவாதம், இந்திய ஒற்றுமை என்ற பேட்டனின் பார்வை, ஹிந்து – முஸ்லிம் கலவரம் பற்றிய தகவல்கள் பரலவலாக உள்ளன.
இந்திய அரசியலில் மவுண்ட் பேட்டன் மனைவி எட்வினாவின் பங்களிப்பு, ஹிந்து- – முஸ்லிம் ஒற்றுமை காக்கப்பட வேண்டும் என்பதில் காந்தி காட்டிய தீவிரம், மவுண்ட் பேட்டனுக்கு இந்தியர் அளித்த மரியாதை போன்றவை முக்கிய செய்திகள். மவுண்ட் பேட்டன் ஆற்றிய பணியை அறிய உறுதுணையாகும் நுால்.
– ராம.குருநாதன்
நன்றி: தினமலர், 10/4/22.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%ae%e0%ae%b5%e0%af%81%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%aa%e0%af%81/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818