நெஞ்சில் நிறைந்த ஏ.என். டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார்

நெஞ்சில் நிறைந்த ஏ.என். டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார், நன்னூல் அகம், விலை 160ரூ-

தொலைக்காட்சி இயக்குநராக பணிபுரிந்த ஏ. நடராஜனின் நினைவு கூறும் நூல். அவர் எழுத்தாளரும் கூட. ஒரு கால கட்டத்தில் சதா சர்வகாலமும் நாம் கேட்டுக் கொண்டிருந்த பெயர் இது.

நிறைய ரசனை உணர்வுகள் பெருகி வந்ததால் பார்த்து வந்த பணிக்கு மேலாக கல்வி கேள்விகளில் சிறந்திருக்கிறார். இசையின் மீதான அவரது ஈடுபாடு போற்றுதற்குரியது. மொத்த நூலிலும் அவர் பற்றி எழுதியிருக்கிற கட்டுரைகளில் ஆத்மார்த்தம் தெரிகிறது. அவர் எல்லோர் மீதும் கொண்டிருந்த அன்பு, எளிமையாக அவர்களை கொண்டாடிய விதம், கத்தி வீச்சு இல்லாமல் சாமர்த்தியமாக இனிய சொல்லால் இழுத்துக்கொள்வது எல்லாமே தெரிகிறது.

ஒவ்வொரு டிசம்பர் சீசனிலும் இசைக் கச்சேரிகளில் அவரின் ஈடுபாடு, கலையை மேலோங்கச் செய்த விதம் ஆச்சர்யப்படுத்துகிறது. நல்லி குப்புசாமியின் வார்த்தைகள் உண்மையான நட்பின் அர்த்தம் காண்பிக்கின்றன. இப்படிப் பலரின் பாராட்டைப் பெறுதல் மிகப் பெரிய விஷயம். அதற்கும் மேலானது அவர்களின் அன்பைப் பெறுவது. மிகை இல்லாத கட்டுரைகள்.

நன்றி: குங்குமம், 24/3/2017.

Leave a Reply

Your email address will not be published.