பணத்தின் பயணம்

பணத்தின் பயணம் – பண்ட மாற்று முதல் பிட்காயின் வரை, இரா. மன்னர் மன்னன், விகடன் பிரசுரம், பக்.336; ரூ.260;

கற்காலத்தில் இருந்து தற்காலம் வரையிலும் பணத்தின் பரிணாம வளர்ச்சியை சொல்லும் நூல் இது. பழங்காலத்தில் இருந்த பண்டமாற்று முறை, தங்கம் போன்ற விலை உயர்ந்த ஆபரணங்களை பிணயப் பொருள்களாகப் பயன்படுத்தியது, கரன்சிகள் உருவெடுத்த வரலாறு, பல்லவர் காலத்தில் பணம் தொடர்பாக பொதிந்துள்ள பொருள் மதிப்பு, பொற்காசுகளாக மாறிய வரலாறு உள்ளிட்டவற்றை தெள்ளத் தெளிவாக நூல் ஆசிரியர் விளக்கியுள்ளது இந்த நூலின் சிறப்பு அம்சமாகும்.

நமது நாட்டின் பண்டைய நாணயங்கள் தொடங்கி, ஆங்கிலேயர் கால நாணயங்கள், தமிழக நாணயங்கள், ராஜராஜன் மற்றும் ராஜேந்திர சோழன் காலத்தில் இருந்து பணம் தொடர்பான வணிகத் தொடர்புகள் என வெவ்வேறு வடிவங்களில் பணம் பயணித்த வரலாற்றை விரிவாகவும் தெளிவாகவும் விளக்குகிறது இந்நூல்.

உலகப் பணத் தாள்கள், பல்வேறு வடிவங்களில் முன்பு வெளியிடப்பட்டிருந்த நாணயங்கள் குறித்து பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் இடம்
பெற்றுள்ளன. கருப்புப் பணம், கள்ளப்பணம் அவற்றால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்த தகவல்கள் மிகச் சிறப்பு.

இந்தியாவில் ஒரு ரூபாய் பணத்தாள் வெளிவந்த கதை, மத்திய அரசின் பெருமைகளில் ஒன்றான இந்த ஒரு ரூபாய் பணத்தாள் குறித்த தகவல்கள் மிக அருமை. ஏ.டி.எம்., கிரெடிட் கார்டுகள் வந்த கதை, அவற்றை வெளியிட வங்கிகளிடையே ஏற்பட்ட போட்டி, அவற்றின் சாதக, பாதக அம்சங்கள் ஆகியவை குறித்தும் நன்றாகவே விளக்கப்பட்டுள்ளது.

உலக வர்த்தகத்தின் அடுத்த கட்டமாகவும், கருப்புப் பொருளாதாரத்தின் அடுத்த பரிமாணமாகவும் இருவேறு கோணங்களில் பார்க்கப்படும் பிட்காயின்கள் குறித்த அலசல் மிக அருமை.

குறிப்பாக, பொருளாதாரம், வணிகம் பயிலும் மாணவர்களுக்கு இந்த நூல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: http://www.nhm.in/shop/1000000026390.html

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

நன்றி: தினமணி, 30/4/2018.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *