பனியில் ஒரு பிரளயம்
பனியில் ஒரு பிரளயம், தமிழில் எஸ். விஜயன், ஜம்போ காமிக்ஸ் சன்ஷைன் லைப்ரரி வெளியீடு, விலை 200ரூ.
மீண்டும் தமிழுக்கு வரும் ஜேம்ஸ் பாண்ட்
உள்ளங்கவர் உளவாளியாம் ஜேம்ஸ் பாண்ட், நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார்; முற்றிலும் புதிய வடிவில். வண்ணச் சித்திரங்கள் கொண்ட இந்த காமிக்ஸ் கதை, ஷான் கானரி காலத்து ஜேம்ஸ் பாண்ட் படங்களைப் போலன்றி, டேனியல் க்ரெய்க் பாணி படங்களைப் போல் ரத்தம் தெறிக்கும் ஆக்ஷன் காட்சிகளைக் கொண்டது.
அதேசமயம், அதிக விவரணைகள், வசனங்கள் இல்லாமல் காட்சிகள் மூலமே கதை நகர்கிறது. போதைப்பொருள் கும்பலைக் கண்டுபிடிக்கச் செல்லும் 007, மொத்தக் கும்பலையும் துவம்சம் செய்கிறார். முத்தமிட்டே கதை முடிக்கக் காத்திருக்கும் அழகிய ஆபத்துகளும் உண்டு. வன்முறை சற்றுச் தூக்கல் என்பதைத் தவிர, குறையொன்றும் இல்லை.
நன்றி: தி இந்து, 24/11/18.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818