புனிதம் தேடும் புதினம்
புனிதம் தேடும் புதினம், கவுதமன் நீல்ராஜ், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், விலைரூ.70.
திருநங்கையரின் காதல் பற்றிய புரிதலையும், உணர்வுகளையும் வெளிக்காட்டுகிறது இந்நாவல். காதலுடன் பெற்றோரைத் தொலைத்த சோகம், வருத்தம், தனிமை, வேலைக்குச் செல்லும் இயல்பு, இயலாமை என அனைத்துப் பக்கங்களையும் எடுத்துரைத்துள்ளார்.
செங்கோடனாகப் பிறந்து சிறுநகையாகமாறிய திருநங்கையைக் கடைசியில் அவரது பெற்றோர் ஏற்கச் செய்வது நம்மை நெகிழச் செய்கிறது. இனிய துாய தமிழ் நடையைக் கையாண்டும் புனிதப்படுத்திக் கொண்டுள்ளது.
திருநங்கையருக்கும் மனம் உண்டு, உணர்வுகள் உண்டு, காதல் உண்டு என மெல்லிய நுாலிழையில் கோர்த்து ஆக்கியுள்ள இப்புதினம், மூன்றாம் பாலினரை ஏற்று, மதிக்கும் மக்களை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.
– முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்
நன்றி: தினமலர்,11/7/21
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818