செவ்வி

செவ்வி, பேராசிரியர் தொ. பரமசிவன் நேர்காணல்கள், கலப்பை பதிப்பகம், விலை 130ரூ.

‘தமிழர்களுடைய மரபுவழி அறிவுத்தொகுதியினை உரையாடல் மரபிலும், அதன் உள்ளீடாக விளங்கும் பழமொழிகள், சொல் அடைகள், கதைகள், சடங்குகள் இவற்றின் வழியாகவே மீட்டெடுக்க முடியும்’ என்று சொல்லும் பேராசிரியர் தொ.பரமசிவனின் 11 நேர்காணல்கள் நூலாக்கம் பெற்றுள்ளன.

‘ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது மக்கள் விரோதச் சித்தாந்தம்’, ‘சாதிகள் உண்மையுமல்ல… பொய்யுமல்ல…’, ‘தொல்தமிழர்களின் சுற்றுச்சூழல் அறிவியல்’ என நேர்காணல்களின் தலைப்புகளே தொ.ப.-வின் கருத்துறுதியை நிரூபிக்கும் வகையில் உள்ளன.

நன்றி: தி இந்து, 12/8/2017.

Leave a Reply

Your email address will not be published.