சிறகு முளைத்தது

சிறகு முளைத்தது, நரசிம்மன், தடம் பதிப்பகம், விலைரூ.220.

 

கடந்த காலத்தை மீட்பது இயலாத காரியம். அது கற்பித்த பாடங்களை தெரிந்து கொள்வது அவசியம். இதை, இந்நுால் நிவர்த்தி செய்கிறது. கடந்து வந்த பாதையை, 40 தலைப்புகளில் விவரித்துள்ளார்.

அப்பா, 50 வயதில் சட்டப் படிப்பை முடித்து, வக்கீலாக பணி செய்தார். என், 30 வயதில், குடும்பக் கடன்களை எல்லாம் அடைத்தார். கடன் இல்லாத வாழ்க்கையை அடிமட்டத்தில் இருந்து துவங்கினார்…’ என, நெகிழ்வான சம்பவங்களை குறிப்பிட்டுள்ளார். சுயசரிதையாக இருந்தாலும், வரலாற்று தகவல்களையும் தந்துள்ளார்.

சென்னையில், 1900ல் பிரபல மருத்துவர் ரங்காச்சாரி, ஏழைகளுக்கு இலவசமாக மருத்துவம் பார்த்தார். ‘பறக்கும் மருத்துவர்’ என அழைக்கப்பட்டார். பிரிட்டீஷ் அரசு மிக உயர்வான மருத்துவ பதவி வழங்கியது. அன்பின் மிகுதியால், சென்னை மக்கள், அரசு மருத்துவமனை வளாகத்தில், அவருக்கு சிலை வைத்துள்ள தகவலையும் பதிவு செய்துள்ளார். வாசிக்க வேண்டிய நுால்.

– டி.எஸ்.ராயன்

நன்றி: தினமலர், 10/1/21

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/9788194660941_/

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published.