சோவியத் இலக்கியம் பற்றி ஜீவா
சோவியத் இலக்கியம் பற்றி ஜீவா, கே.ஜீவபாரதி, அன்னம் (பி) லிட், பக்.118, விலை 100ரூ.
ஆழியின் சீற்றத்தால் அழிந்த தமிழ் நுால்களை விட, அறியாமையாலும் கவனக்குறைவாலும் மறைந்து போன நுால்களும், அறிஞர்களும் ஏராளம். ‘இலக்கியத்தில் புதிய எதார்த்தவாதம்’ என்ற தலைப்பில் ஜீவா, ‘தாமரை’ இதழில் எழுதிய தொடர் கட்டுரைகளின் தொகுப்பே இந்நுால்.
இந்நுாலைப் பயில்வதன் மூலம் மனிதகுல வளர்ச்சிக்கு இலக்கியத்தை எப்படி பயன்படுத்த முடியும் என்பதையும், சோவியத் வளர்ச்சிக்கு வித்திட்ட கார்க்கி மற்றும் மாயக்கோவ்ஸ்கி வரலாற்று நாயகர்களின் இலக்கிய ஆளுமைகளையும், மார்க்ஸ், லெனின், போன்ற மாமேதைகளின் இலக்கியச் சிந்தனைகளையும் தெரிந்து கொள்ளலாம்.
–மாசிலா ராஜகுரு
நன்றி: தினமலர், 8/9/19
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818