ஸ்ரீ ஆதிசங்கரர் நிறுவிய ஆதிமடம் காஞ்சி
ஸ்ரீ ஆதிசங்கரர் நிறுவிய ஆதிமடம் காஞ்சி, அல்லூர் வெங்கட்டராமய்யர், ஆனந்த நிலையம், பக். 165, விலை 200ரூ.
சோதிடத்தில் தேர்ந்த ஆசிரியர் காஞ்சி மடத்தின் பெருமைகளை நுாலாக தொகுத்திருக்கிறார். காஞ்சி மகாபெரியவரின் ஆசி பெற்ற இவர் அம்மடத்தின் பரமபக்தன் என்பதில் பெருமை கொண்டவர்.
தொண்டைநாட்டின் புகழ்பெற்ற காஞ்சி, இந்திய திருநாட்டின் தெய்வீக நகரங்கள் ஏழினுள் ஒன்று என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. இங்கு ஆதிசங்கர மகான் வந்தார் என்பதும் வரலாறு.
ஆனால் அவர், ‘சனாதன மதம் ’என்ற தத்துவத்தை தன் அத்வைத கோட்பாடுகளால் நிறைவேற்றிய தெய்வீக மகான். அவர் நாட்டின் எல்லையை வரையறுத்த தோற்றத்தில் உருவாக்கிய மடங்கள் நான்கு மட்டுமே. அதில் சிருங்கேரி மடத்தை நிறுவி, அங்கே பல ஆண்டுகளைக் கழித்தவர்.
ஆனால், அவர் முதலில் தோற்றுவித்தது காஞ்சி மடம் என்ற தகவல், 200 ஆண்டுகளாக கூறப்படுகிறது. அதை ஆதாரமாக்கி, காஞ்சி சங்கர மடத்திற்கு பெருமை கூட்ட உருவான நுால். ஆனால் ஆதிசங்கரர் காலம் கி.பி., 8ம் நுாற்றாண்டு என்ற வரலாற்றை மறைக்கும் வகையில், ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக இந்த மடம் இருப்பதாக எழுதும் ஆசிரியர் முயற்சி புதுமையில் ஒன்று.
நன்றி: தினமலர், 20/10/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818