ஆன்மீகம் தெய்வீகம்

ஆன்மீகம் தெய்வீகம் , சத்யவதனா, சத்யா பதிப்பகம்,  பக்.236, விலை ரூ.300. “பிரதோஷத்தின் பலன்கள்’,”ஐந்தெழுத்து மந்திர ஆற்றல்’, “கடவுளைக் காண்பது எப்படி?’, “ஸ்ரீராமபக்த ஆஞ்சநேயரின் பெருமை’ என்பன உள்ளிட்ட 52 தலைப்புகளில் எழுதப்பட்ட ஆன்மிக கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். திருக்கோயில்கள், தரிசனங்கள், வழிபாட்டு முறைகள் குறித்த அபூர்வ தகவல்களை நூலாசிரியர் இந்நூலில் வாரி வழங்கியிருக்கிறார். போகருக்கே ஞானம் வழங்கிய புலிப்பாணிச் சித்தரின் வரலாறு வியப்பூட்டுகிறது. “ஒருவன் தீய எண்ணத்துடன் மற்றவர்களுக்கு அன்னதானம் செய்தால், அதை உண்டவனின் ரத்தத்திலும் தீய எண்ணம் கலந்து விடும். நான் […]

Read more

அற்புதங்கள் தரும் ஆலயங்கள் 5 பாகங்கள்

அற்புதங்கள் தரும் ஆலயங்கள் 5 பாகங்கள், சத்யவதனா, சத்யா பதிப்பகம், பக். 1340, விலை 675ரூ. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை உட்பட, தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் வாரியாகவும், ஆந்திரா, கர்நாடகா, அசாம், கேரள மாநிலங்களில் உள்ள, 187 ஹிந்து தலங்கள் பற்றிய சிறு முன்னோட்டத்தை, இந்நுால்கள் வழங்கியுள்ளன. நான்கு பாகங்களை, சத்யவதனா என்பவரும், ஐந்தாவது பாகத்தை, வீரரகுவும் எழுதியுள்ளனர். ஐந்தாவது பாகம், அதிலிருந்து சற்று வித்தியாசமாக உள்ளது. உலகின் முதல் சிவன் கோவில், சிவராத்திரி சிறப்புகள், 1,008 லிங்கங்களின் பெயர்கள் என, சுவாரஸ்யமாகவும் […]

Read more