சாதி தேசத்தின் சாம்பல் பறவை

சாதி தேசத்தின் சாம்பல் பறவை, ‘எவிடன்ஸ்’கதிர், விகடன் பிரசுரம், விலை 175ரூ. சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிமை கிடைக்க வேண்டும். காவல் துறை வன்முறைகள், ஜாதிய வன்கொடுமைகள், பெண்கள் மீதான கொடுமைகள் என கள ஆய்வு செய்து, செய்திகளோடு மட்டும் அல்லாமல் ஆதாரப் படத்துடன் கூடிய, 29 நீண்ட கட்டுரைகளைக் கொண்டது இந்நூல். ஜாதியக் கொடுமைகளுக்கு எதிராக மட்டும் அல்லாமல், பெண்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராகவும் இந்நூல் குரல் கொடுக்கிறது. சமூக நீதிக்காகவும், மனித உரிமைக்காகவும் இந்நூல் பதியப்பட்டு உள்ளது. – முனைவர் […]

Read more

சாதி தேசத்தின் சாம்பல் பறவை

சாதி தேசத்தின் சாம்பல் பறவை, எவிடன்ஸ் கதிர், விகடன் பிரசுரம், விலை 175ரூ. எத்தனை நிறங்களைப் பூசி இதை இந்திய தேசம் என்று நாம் சொல்லிக்கொண்டாலும், நாட்டு நடப்புகள் அத்தனையும் இதை, ‘சாதி தேசம்’ என்றுதான் தினமும் சொல்லிக்கொண்டிருக்கிறது. கோயில் முதல் கொலைகள் வரை, கல்யாணம் முதல் கருமாதி வரை, கிராமத்துப் பள்ளிகள் முதல் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் வரை நடக்கும் சம்பவங்கள் திரும்பத் திரும்பச் சொல்வது, ‘சாதி தேசம்’ என்ற அடையாளத்தைத்தான். அதற்கான ‘எவிடென்ஸ்’தான், கதிர் எழுதியுள்ள இந்தப் புத்தகம். சிலரைப் […]

Read more

சாதி தேசத்தின் சாம்பல் பறவை

சாதி தேசத்தின் சாம்பல் பறவை, எவிடன்ஸ் கதிர், விகடன் பிரசுரம், பக். 216, விலை 175ரூ. காவல் துறை வன்முறைகள், சாதிய வன்கொடுமைகள், தீண்டாமை சித்ரவதைகள், கொத்தடிமை தொழிலின் அவலம், பெண்கள் மீதான கொடுமைகளுக்கு எதிராக, 20 ஆண்டுகளாக போராடிய, ‘எவிடன்ஸ்’ கதிரின் அனுபவங்களே இந்த கட்டுரை தொகுப்பு. இந்த புத்தகம், அநீதிகள் நடக்கும்போது, அமைதியாய் இருப்போரின் மனசாட்சியை தட்டி எழுப்பும். நன்றி: தினமலர், 17/1/2017.

Read more