சாமிநாதம்

சாமிநாதம், (உ.வே.சா. முன்னுரைகள்), பதிப்பாசிரியர் ப. சரவணன், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், விலை 1000ரூ. தமிழ் இலக்கியம் பிழைத்திருப்பதற்குக் காரணமான தனிமனிதர்களில் முக்கியமானவர் உ.வே.சா. எந்த வசதிகளும் இல்லாக் காலத்தில் தன்னுடைய தமிழ் உணர்ச்சியை மட்டுமே உந்து சக்தியாகக் கொண்டு ஊர் ஊராகத் திரிந்து ஓலைச்சுவடிகளைத் திரட்டி வந்து, எழுத்தெண்ணிப் படித்து, பாடம் பிரித்து அவர் பதிப்பித்திருக்காவிட்டால் புறநானூற்றுப் பெருமையும் சிலப்பதிகாரத்தின் சிறப்பும் மணிமேகலையின் வனப்பும், திருவிளையாடற் புராணத்தின் நயமும் அறியாமல் போயிருக்கும் தமிழ்ச்சமூகம். ஓலைச்சுவடியில் என்ன இருக்கிறது என்பதையே படிக்கத் தெரியாமல், படித்தாலும் […]

Read more