சங்கமி

சங்கமி : பெண்ணிய உரையாடல்கள் – தொகுப்பாசிரியர்கள்,  ஊடறு றஞ்சி, புதியமாதவி, காவ்யா, பக்.372, விலை ரூ.400. பெண்கள் சமூகத்தாலும் கூடவே ஆணாதிக்கத்தாலும் ஒடுக்கப்படுகிறார்கள் என்ற அடிப்படையில் பெண்ணியச் சிந்தனைகள் வளர்ந்து வந்திருக்கின்றன. சமகாலத்தில் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள் மாறுபடுகின்றன. அதையொட்டி பெண்ணியச் சிந்தனைகளிலும் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இலங்கையில் இனப் போராட்டத்தின்போது ஆயுதம் தாங்கிப் போராடிய பெண்கள், ராணுவத்தால் பாலுறவுத் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்கள், ஆப்கானிஸ்தானத்தில் அந்நிய நாட்டு ஆக்கிரமிப்பு சக்திகளின் தாக்குதலினால் இடம்பெயர்ந்து வேறுநாடுகளில் சென்று வாழும் பெண்கள், சாதி ஒடுக்குமுறையால் பாதிக்கப்படும் […]

Read more

ரசூலின் மனைவியாகிய நான்

ரசூலின் மனைவியாகிய நான்,  புதியமாதவி, காவ்யா, பக்.139, விலை ரூ.140 ஏழு கதைகளின் தொகுப்பு இந்நூல். முதல் கதையான "ரசூலின் மனைவியாகிய நான் ஒரு குறுநாவல். மும்பை ரயில் குண்டுவெடிப்பில் பலத்த காயமடைந்த ரசூல் கோமா நிலையில் மருத்துவமனையில் இருக்கிறான். அவனுடைய மனைவி கவுரி, மருத்துவமனைக்கு வந்து அவனைக் கவனித்துக் கொள்கிறாள். அதே குண்டுவெடிப்பில் கவுரியின் வீட்டருகே உள்ள பணக்காரரான மங்கத்ராமின் மகன் கபில் இறந்துவிடுகிறான். ரசூல் இருக்கும் மருத்துவமனையில் அவனைப் போலவே குண்டுவெடிப்பில் காயமடைந்த ஹேமா இருக்கிறாள். ரசூலுடன் குண்டுவெடித்த ரயிலில் பயணம் […]

Read more