ரசூலின் மனைவியாகிய நான்

ரசூலின் மனைவியாகிய நான்,  புதியமாதவி, காவ்யா, பக்.139, விலை ரூ.140 ஏழு கதைகளின் தொகுப்பு இந்நூல். முதல் கதையான "ரசூலின் மனைவியாகிய நான் ஒரு குறுநாவல். மும்பை ரயில் குண்டுவெடிப்பில் பலத்த காயமடைந்த ரசூல் கோமா நிலையில் மருத்துவமனையில் இருக்கிறான். அவனுடைய மனைவி கவுரி, மருத்துவமனைக்கு வந்து அவனைக் கவனித்துக் கொள்கிறாள். அதே குண்டுவெடிப்பில் கவுரியின் வீட்டருகே உள்ள பணக்காரரான மங்கத்ராமின் மகன் கபில் இறந்துவிடுகிறான். ரசூல் இருக்கும் மருத்துவமனையில் அவனைப் போலவே குண்டுவெடிப்பில் காயமடைந்த ஹேமா இருக்கிறாள். ரசூலுடன் குண்டுவெடித்த ரயிலில் பயணம் […]

Read more