தமிழ்நாட்டு கொலை வழக்குகள் பாகம் 2
தமிழ்நாட்டு கொலை வழக்குகள் பாகம் 2, கோமல் அன்பரசன், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், பக். 132, விலை 120ரூ.
இரண்டாம் பாகமாக இரட்டிப்பு கொலை வழக்குகளுடன் சுடச் சுட வந்துள்ளது, ‘தமிழ்நாட்டு கொலை வழக்குகள்!’ பல நேரங்களில் செய்திகளை விட அதன் பின்னணி ஆச்சரியம், அதிர்ச்சி தரும் என ஆசிரியர் கோமல் அன்பரசன் தன், ‘என்னுரை’யில் குறிப்பிட்டு, உண்மை தன்மை மாறாத கதை படிக்கலாம் என நம்பிக்கை தருகிறார்.
ஆட்டோ சங்கர், நாவரசு, பிரேமானந்தா, டாக்டர் பிரகாஷ் என முக்கிய வழக்குகளின் பின்னணியை படிக்கும் போது, வழக்கு விசாரணையை நீதிமன்றத்தில் அமர்ந்து பார்ப்பது போல தோன்றுகிறது.
கொலையானவரின் வாழ்க்கை நிகழ்வுகள் சிறு குறிப்பாக இருப்பதால் வீட்டு தியேட்டரில், புத்தக திரையில் சினிமா பார்ப்பது போல் உணர்வு ஏற்படுகிறது. வழக்கறிஞர், சட்டக் கல்லுாரி மாணவர்கள் படிக்க வேண்டிய முக்கிய புத்தகம் இது.
பக்கமெல்லாம் நம் கை விரல் ரேகை பதியும் என்பதை தான், அட்டை பக்கத்து சிவப்பு கை விரல் ரேகை படம் உணர்த்தியது என்ற உண்மை, புத்தகம் படித்து முடித்த பிறகு தான் தெரிந்தது. மொத்தத்தில் தீர்ப்புகளை தாங்கி வந்த புதிய வார்ப்புகள், ‘தமிழ்நாட்டு கொலை வழக்குகள்!’
– ஸ்ரீனி
நன்றி: தினமலர், 23/2/20.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818