தமிழரின் சுற்றுவட்டப் பாதையில் தந்தை பெரியார்
தமிழரின் சுற்றுவட்டப் பாதையில் தந்தை பெரியார், கருவூர் கன்னல், காவ்யா, பக். 107, விலை 110ரூ.
ஒரு மனிதனது சுற்றுப்புறச் சூழலே அவனது சிந்தனைகளைத் தீர்மானிக்கிறது. பெரியார் ஈ.வெ.ரா.,வின் அன்றைய சூழ்நிலைகளே அவரை வடிவமைத்தன. அவர் அன்று மட்டுமன்றி, இன்றைய தமிழரின் சுற்றுவட்டப் பாதையில் எவ்வாறு பயணித்துக் கொண்டிருக்கிறார் என்பதை இந்நுால் விளக்குகிறது.
படிப்படியான ஐந்து பகுப்புகளில் பெரியாரைப்பற்றி முழுமையாக விளங்கச் செய்கிறது இந்நுால். பெரியாரின் நிலையும் நினைப்பும், அவர் பிறந்து வளர்ந்த சூழலுக்கேற்ப அவர் இயங்கி வந்த நிலையை எடுத்துரைக்கிறது. சிந்தனையும் செயலும் பெரியாரின் சாதிய எதிர்ப்பையும், சுயமரியாதைத் திருமணத்தையும் பறைசாற்றுகிறது.
‘உலகு தொழும் மண்டைச் சுரப்பு’ -பெரியாரின் இட ஒதுக்கீடு, ஹிந்தி எதிர்ப்புச் சிந்தனை, அவரைத் தொடர்ந்து இக்காலகட்ட நிலையையும் எடுத்துரைத்துச் செல்கிறது. எனினும் மொழி வளர்ச்சியில் நவீன தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் மொழித் தொழில்நுட்ப வளர்ச்சியைக் கருத்தில் கொண்டால், மொழி ஆய்வாளர்களுக்கு இந்திய மொழிகள் மற்றும் உலக மொழிகளின் அறிவுப் புலமையும் தேவை.
ஜாதியால் பிரித்துப் பிளவுபடுத்தி ஆதிக்கம் செலுத்தியவர்கள் அஞ்சி நடுங்குமாறு, புரட்சிகரமான சிந்தனைகளைத் தமிழர்களின் சுற்று வட்டப்பாதையில் சுற்றிக்கொண்டே இருக்கச் செய்தவர். அவரது பகுத்தறிவு வெளிச்சம் மங்கிப் போகாது வெளிச்சம் காட்டுகிறது இந்த நுால்.
நன்றி: தினமலர், 29/12/2019
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818