திராவிட இயக்க இலக்கிய வரலாறு

திராவிட இயக்க இலக்கிய வரலாறு, ப.கமலக்கண்ணன், காவ்யா, விலை 230ரூ.

வடநாட்டினரின் ஆதிக்கத்தில் உருவான புராணங்கள், இதிகாசங்கள் ஆகியவை பற்றி தமிழ்ச் சமுதாயத்தில் பல நூறு ஆண்டுகளாக ஆழமாக வேரூன்றிப் போன நம்பிக்கைகளைத் துடைத்தெறிவதற்காகத் தோன்றிய திராவிட இயக்க இலக்கியங்களை இந்த நூல் தொகுத்து அவற்றை சிறந்த முறையில் அடையாளப்படுத்தி இருக்கிறது.

சாதி வேறுபாடுகள், தீண்டாமை, பெண்ணிய அடக்குமுறை ஆகியவற்றுக்கு எதிராகக் குரல் எழுப்பிய தலைவர்கள், இந்தப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக உருவான இயக்கங்கள், இதழ்கள், படைப்பாளிகள், படிப்பாளிகள் ஆகிய அனைத்தையும் இந்த நூல் சிறப்பித்துக்காட்டுகிறது.

ஈ.வெ.ரா. பெரியார், அறிஞர் அண்ணா போன்றவர்கள் இது தொடர்பாக நடத்திய ஆய்வுகள், திராவிட இயக்கத்திற்குச் சிறப்புச் சேர்த்த எழுத்தாளர்கள், கவிஞர்கள், அவர்கள் படைத்த இலக்கியங்களின் பட்டியல், அந்த இலக்கியங்களில் இடம் பெற்ற புகழ்மிக்க பகுதிகள் ஆகியவற்றையும் இந்த நூலில் காணமுடிகிறது.

நன்றி: தினத்தந்தி, 4/9/19.

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *