உயர் கணித நட்சத்திர ஜோதிடம்
உயர் கணித நட்சத்திர ஜோதிடம், ஏ.திருநாவுக்கரசு, கற்பகம் புத்தகாலயம், பக். 104, விலை 90ரூ.
இந்நுால், அடிப்படை ஜோதிட கணிதங்கள், காரகங்கள், உயர் கணித சார ஜோதிட விதிகள் மற்றும் உதாரண ஜாதகங்களால் விளக்கம் என, நான்கு பகுதிகளாக உள்ளது.
ராசிக் கட்டங்களின், 12 பாவங்களுக்கும் லக்னம் அமைத்து, அந்த லக்னம் நின்ற நட்சத்திராதிபதியைக் கொண்டு, பலன்கள் சொல்லும் முறையை நுாலாசிரியர் கூறுகிறார்.
இந்நுாலில், ஜாதகங்களை விளக்கும்போது, கால புருஷ தத்துவ விளக்கங்களோடு இணைத்து, நுாலாசிரியர் விளக்கும் பாங்கு பாராட்டத்தக்கது.
ஓரளவு ஜோதிடப் புலமையுள்ள ஜோதிடர்களால் மட்டுமே இம்முறையைப் பின்பற்ற முடியும். மொத்தத்தில், புதியவர்களுக்கு இது புதிரானது.
– பூ.பாலசங்கர்
நன்றி:தினமலர், 4/8/19
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818