விடைதேடும் வினாக்கள்
விடைதேடும் வினாக்கள், வாழ்வியல் – ஆன்மிகம் – தத்துவம் குறித்த தேடல்களுக்கான விடைகள், தமிழருவி மணியன், கற்பகம் புத்தகாலயம், பக்.216, விலை ரூ.160.
விடைதெரியாத கேள்வி களுக்கு இடையில்தான் வாழ்க்கை நதி ஓடிக் கொண்டிருக்கிறது என இந்நூல் உருவாகியதற்கான காரணத்தை ஒரு வரியில் சொல்கிறார் நூலாசிரியர்.
எந்தக் கேள்வியாக இருந்தாலும் அதற்கு அறிஞர் பெருமக்கள், ஆன்மிகப் பெரியோர்கள், தத்துவ ஞானிகள், கவிஞர்கள் ஆகியோர் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பதையே பெரும்பாலும் தனது பதிலாகத் தந்திருக்கிறார்.
என்னைச் சுற்றியிருப்பவர்கள் தீமையின் வடிவங்களாக வலம் வரும்போது, அவர்களிடமிருந்து எப்படி என்னை காப்பாற்றிக் கொள்வது? என்ற கேள்விக்கான பதிலும், மகிழ்ச்சி பற்றிப் பேசு, நம்பிக்கையுடன் பேசு. இல்லை எனில் நம்பிக்கை வரும் வரை உன் புரையோடிய எண்ணங்களை மௌனத்தின் பரண்களில் மூடி வைத்து விடு. நலமாக இருப்பதாகச் சொல். இறைவன் உன் வார்த்தைகளைக் கேட்பார். புறவுலகில் அது நிறைவேற அவர் உதவுவார் என்ற பதிலுக்கான கேள்வியும் பயனுள்ளவையே.
கேள்வி சரியாக இருந்தால்தான் விடை பயனுள்ளதாக இருக்கும். அதனை இந்நூலில் உள்ள கேள்வி,பதில்கள் நிறைவு செய்கின்றன.
விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் சோறும், நீரும்தான் வாழ்க்கை. மனித இனத்துக்கு உயர் நெறிகளுடன் கூடிய பண்பாடுதான் உயிர்மூச்சு என்பதை, மனித வாழ்வின் அர்த்தமாக இந்நூல் விளக்குகிறது.
எல்லாவிதமான மனிதர்களுக்கும், எல்லாவிதமான கேள்விகளுக்கும் ஐயங்களைத் தெளிவிப்பதோடு, அமைதி, ஆறுதல், சிந்தனை, பிரமிப்பு போன்ற உணர்வுகளை இந்நூல் எழுப்புகிறது.
நன்றி: தினமணி, 25/3/19
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818