ஏவி.எம். ஒரு செல்லுலாய்டு சரித்திரம்
ஏவி.எம். ஒரு செல்லுலாய்டு சரித்திரம், ஏவி.எம். குமரன், டிஸ்கவரி புக் வேலஸ், சென்னை, பக். 248, விலை 200ரூ.
ஏவி.எம். மெய்யப்ப செட்டியாருக்கு அருகில் இருந்து தான் கற்றுக்கொண்ட பல அரிய பாடங்களை தொடர்புடைய அந்தந்த திரைப்படங்களோடும், தானே நேரடியாகப் பணியாற்றிய சில படங்களில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் ஏவி.எம்.குமரன் பதிவு செய்துள்ள தொகுப்பு. ஏவி.எம். நிறுவனம் பல்வேறு மொழிகளில் தயாரித்த திரைப்படங்களின் உருவாகத்தின் ஆரம்பம் முதல் கடைசிநாள் படப்பிடிப்பு, அதன் வெளியீடு வரை எல்லா நிகழ்வுகளிலும், கூடவே இருந்த அப்போதைய சம்பவங்கள், கலைஞர்களுடன் ஏற்பட்ட அனுபவங்களை இந்நூலில் பதிவு செய்திருக்கிறார் ஏவி.எம்.குமரன். சென்னை கோடம்பாக்கம் பகுதியில் குதிரை லாயம் வைத்திருந்த ஒருவரிடம் இடம் வாங்கி காடாகக் கிடந்த நிலப்பகுதியைச் சீரமைத்து ஏவி.எம்.ஸ்டூடியோவைத் தொடங்கி, தேவகோட்டை ரஸ்தாவிலிருந்து ஸ்டூடியோவை சென்னைக்கு மாற்றம் செய்திருக்கிறார் ஏவி.மெய்யப்பன். 1954-இல் வெளிவந்த அந்த நாள் திரைப்படம் தொடங்கி, களத்தூர் கண்ணம்மா, வீரத்திருமகன், பார்த்தால் பசி தீரும், அன்னை, சர்வர் சுந்தரம், அன்பே வா, உயர்ந்த மனிதன், அதே கண்கள், முரட்டுக்காளை, சகலகலா வல்லவன் உள்ளிட்ட 25 திரைப்படங்களில் தனக்கு நேர்ந்த அனுபவங்கள், கற்ற பாடங்கள், எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், நாகேஷ், ரஜினி காந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட ஏராளமான கலைஞர்களின் வளர்ச்சி, படப்பிடிப்புத் தளங்களில் தன்னுடன் அவர்கள் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் என பல அரிதான சம்பவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார் நூலாசிரியர். நன்றி: தினமணி, 8/12/2014.