குப்பை உலகம்
குப்பை உலகம், சுப்ரபாரதி மணியன், சேவ், பக். 96, விலை 60ரூ.
நாவல், சிறுகதைகள் எனப் படைப்பிலக்கியத் துறையில், நிறைய எழுதியுள்ள பிரபல எழுத்தாளரான சுப்ரபாரதி மணியன், சுற்றுப்புறச் சுழல் குறித்து எழுதியுள்ள கட்டுரைகளின் தொகுப்பு. சாயக் கழிவு நீரால் மாசுபட்டுக் கிடக்கும் ஆறுகள் மற்றும் அதை ஒட்டியுள்ள, விவசாய நிலங்கள் பாழாகிப்போய்க் கொண்டிருப்பதைப் பற்றிக் கவலை தெரிவிக்கும் சுற்றுச்சூல் பணியாளர்களின், பொதுத் தொண்டு, அனைத்து மக்களுக்கும், தெரியப்படுத்த வேண்டிய முக்கியமான விஷயம். இந்த வகையில் இந்த நூலாசிரியரின் இந்தக் கட்டுரைத் தொகுப்பு வரவேற்பிற்குரியது. -ஜனகன். நன்றி: தினமலர், 20/4/2014.
—-
அறிவு தரும் பெரிய திருமொழி ஓர் அறிமுகம், டாக்டர் ஹேமா ராஜகோபாலன், பெங்களூரு, பக். 176, விலை 80ரூ.
நாற்கவிப்பெருமாள் என்ற சிறப்புப் பெற்றவர், திருமங்கையாழ்வார் ஆவார். அவரின் பெரிய திருமொழியில், 1084 பாசுரங்கள் உள்ளன. அப்பாசுரங்களில் கூறப்படும் திவ்விய தேசங்கள், சிலவற்றின் பெருமைகளை இந்நூல் விவரிக்கிறது. ஆசிரியரின் இனிய எளிய நடை நூல் படிக்கத் தூண்டுகிறது. 51 திருத்தலங்களின் பெருமைகளை, திருமங்கையாழ்வார் பாசுரங்களுடன் விவரித்துச் சொல்வது, மிக அருமையாக உள்ளது. வைணவ அடியார்களுக்கு மிகவும் பயனுள்ள நூல். -டாக்டர் கலியன்சம்பத்து. நன்றி: தினமலர், 20/4/2014.