குருதிப்புனல்

குருதிப்புனல், இந்திரா பார்த்தசாரதி, கவிதா பப்ளிகேஷன், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, விலை 150ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8368-072-1.html

தமிழ்நாட்டில் நடந்த கலவரங்களில், தஞ்சை மாவட்டம் கீழவெண்மணி கிராமத்தில் நடந்த கலவரம் முக்கியமானது. மிராசுதாரர்களுக்கும், விவசாயிகளுக்கும் நடந்த தகராறில், விவசாயிகள் சுமார் 40பேர் உயிருடன் கொளுத்தப்பட்டார்கள். அவர்களில் பெரும்பாலோர் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள். இச்சம்பவத்தை அடிப்படையாக வைத்து, எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி எழுதிய குருதிப்புனல் சாகித்ய அகாடமி பரிசைப் பெற்ற சிறந்த நாவல். உணர்ச்சியும் உயிர்த்துடிப்பும் மிக்க இந்த நாவல், நீண்ட இடைவெளிக்குப்பின் நவீன கட்டமைப்புடன் வெளிவந்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 26/6/2013.  

—-

 

வாழ்க்கை பாடங்கள், அருட்பணி, சேவியர், இருதயராஜ் சே.ச., நாஞ்சில் பதிப்பகம், கோர்ட்டு ரோடு, நார்கோவில் 1, விலை 45ரூ.

மனித வாழ்வில் நடந்த நிகழ்வுகள், அனுபவங்களை பொருத்தமான பைபிள் வசனங்களுடன் இணைத்து இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. மனித நேயத்தோடு, இறை நம்பிக்கையோடும் வாழும்போது வெற்றி வசப்படும் என்பது இந்த நூலின் மூலம் விளக்கப்படுகிறது. நன்றி: தினத்தந்தி, 26/6/2013.  

—-

 

சுண்டி இழுக்கும் சூப்பர் சமையல், பத்மா, விகடன் பிரசுரம், அண்ணா சாலை, சென்னை 2, விலை 95ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-135-3.html

சர்க்கரைவள்ளிக் கிழங்கு அல்வா, கேழ்வரகு இனிப்பு தோசை, புதினா ரைஸ், வெஜிடபிள் ஊத்தப்பம்… இப்படி விதம் விதமான உணவுகளை சுவைபட தயாரிப்பதற்கு வழி சொல்லும் புத்தகம். புத்தகம் முழுவதும் வண்ணத்தில் அச்சிடப்பட்டு கண்ணைக் கவருகிறது. நன்றி: தினத்தந்தி, 26/6/2013.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *